For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமாரமங்கத்துக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமா? அப்பல்லோ மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உரியசிகிச்சை அளிக்கப்படாததால் தான் அவரது நிலைமை இவ்வளவு மோசமடைந்தது என்ற புகார்கள் எழுந்துள்ளன.

ஆனால், இதனை அப்பல்லோ மருத்துவணை தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி மறுத்துள்ளார்.

சென்னையில் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் ரெட்டி கூறுகையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரைடெல்லி அப்பல்லோ மருத்துவனையில் ரங்கராஜன் குமாரமங்கமல் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குநல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு 23 ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து பரிசோதனையும் சிகிச்சையும் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தோம்.ஆனால், அதற்குப் பின் அவர் மருத்துவமனைக்கே வரவில்லை.

அப்பல்லோவுக்கு அவர முதலில் சிகிச்சைக்கு வந்தபோது, வலதுபுற நுரையீரலில் நோய்த் தாக்குதல் இருந்தது.பாதிக்கப்பட்ட செல்களை சோதனை (பயாப்ஸி) செய்தோம். அவருக்கு புற்றுநோயோ அல்லது டி.பி. தாக்குதலோஇல்லை என்று சோதனையில் தெரியவந்தது.

ரத்தசோதனையிலும் எந்தப் பிரச்சனையும் தெரியவில்லை. அவருக்கு லுகேமியா தாக்குதல் இருப்பதாக இப்போதுபத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. ஆனால், அப்பல்லோவில் சோதனை செய்தபோது அப்படி ஏதும்தெரியவிஸ்ஸை.

ஏப்ரல் மாதத்தில் அப்பல்லோவில் சிகிச்சை பெறும் முன் அந்தமானில் அவர் சிகிச்சை பெற்றார். இதையடுத்துஅப்பல்லோவில் சேர்ந்தவுடன் அந்தமான் மருத்துவத்துறை இயக்குனர் கூறியபடி மலேசிரியா எதிர்ப்புமருந்துகளைக் கொடுத்தோம். இதையடுத்து காய்ச்சல் குறைந்தது.

ஆனால், நாடாளுமன்றம் நடப்பதால் தான் உடனடியாக செல்ல வேண்டும் என்று குமாரமங்கலம் கூறினார்.இதையடுத்து அவரை டிஸ்சர்ஜ் செய்தோம். ஆனால், அவர் அடிக்கடி மருத்துவனைக்கு வந்து செல் ல வேண்டும்என பரிந்துரைத்திருந்தோம்.

ஹார்வர்ட் மருத்துவமனை, மும்பையில் உள்ள குமாரமங்கலத்தின் குடும்ப மருத்துவர் ஆகியோரிடமும்ஆலோசித்தோம். அவரகளும் அப்பல்லோவில் தரப்பட்ட சிகிச்சை சரி என்றே கூறினர் என்றார் ரெட்டி.

குமாரமங்கலம் நிலைமை மோசம்:

இந் நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ள குமாரமங்கலத்தின் உடல் நிலைமேலும் மோசமடைந்தது.தொடர்ந்து அவரது நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ். மருத்துவமனை மருத்துவர்கள்தெரிவித்தனர்.

அவருக்கு செயற்கை சுவாசமும், ரத்த சுத்திகரிப்பும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமைஅவரது உடலில் பல பாகங்களும் செயல் இழந்தன.

புதன்கிழமை மாரடைப்பும் ஏற்பட்டது. என்ன நோய் தாக்கியிருக்கிறது என்பதை இன்னும் மருத்துவர்களால்கண்டுபிடிக்க முடியவில்லை. சுயநினைவின்றி உள்ள குமாரமங்கலத்துக்கு வயது 48.

கடந்த 2 மாதங்களாகவே கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த குமாரமங்கலத்தின் உடல் நிலை கடந்தசெவ்வாய்க்கிழமை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சோதனையில் அவரது ரத்தத்தில் கடும் பாதிப்புஏற்பட்டிருப்பது (செப்டிசீமியா) தெரியவந்தது.

முதற்கட்ட சோதனையில் அவருக்கு மைலாய்ட் லுகேமியா நோய் தாக்கியிருப்பதாகத் தெரியவந்ததுள்ளது.அவரது எலும்பு மஜ்ஜையில் உடல் எதிர்ப்புத் திறனுக்குத் தேவையான லுகோசைட் செல்கள் போதுமான அளவுஇல்லை என்று தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X