இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் மே.இ. தீவுகள் படுதோல்வி
ஹெட்டிங்லி:
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஹெட்டிங்லியில் நடைபெற்ற 4-வது கிரிக்கெட்டெஸ்டில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டெஸ்டின் இரண்டாவது நாளிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணிபடுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் என்ற நிலையில்தனது ஆட்டத்தை இங்கிலாந்து வெள்ளிக்கிழமை தொடர்ந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியிந் வால்ஷ், ஆம்புரோஸ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சில் இங்கிலாந்து ரன் குவிக்க தடுமாறியது. இருப்பினும் வாகன்,ஹிக், தோர்பேஆகியோர் ஓரளவு நின்று ஆடி ரன்கள் குவித்தனர்.
இதனால், இங்கிலாந்து அணி 272 ரன்கள் என்ற கவுரமான ஸ்கோரை எட்டியது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 100 ரன்கள் கூடுதலாகப் பெற்றதுஇங்கிலாந்து. வாகன் 76 ரன்களும், ஹிக் 59 ரன்களும், தோர்பே 46 ரன்களும்எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வால்ஷ். ஆம்புரோஸ் இருவரும் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
100 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியதுமேற்கிந்தியத் தீவுகள். தொடக்கமே அந்த அணிக்கு பலத்த அடியாக இருந்தது.
இங்கிலாந்து அணியின் டேரன் கோ சிறப்பாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகள் அணிவிக்கெட்டுகளை வீழ்த்தினார். 21 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தஅணியை சரிவிலிருந்து மீட்க கேப்டன் ஆடம்ஸ், சர்வான் இருவரும் முயன்றனர்.
ஆனால், அந்த கூட்டணியை கார்க் உடைத்தார். அவருக்கு அடுத்து பந்து வீச வந்தகாட்டிக் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடைசி விக்கெட்டுகளை மளமளவென்றுவீழ்த்தினார்.
ஒரே ஓவரில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மீள முடியாத அளவுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தினார்.
இறுதியில் 61 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இன்னிங்ஸ்மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்தது.அணியில் 5 பேர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியில் டேரன் கோ 4 விக்கெட்டுகளையும், காட்டிக் 5விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் வாகன் சிறந்தஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
டெஸ்டின் 2-வது நாளிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்ததுகுறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள்எடுத்தது.
இந்த டெஸ்ட் தொடரின் அடுத்த மற்றும் கடைசி ஆட்டம் ஓவலில் ஆகஸ்ட் 31-ம் தேதிதொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில்முன்னிலையில் உள்ளது.
முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளும், இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தும்வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications