அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்தது.
வெள்ளிக்கிழமை மார்க்கெட் நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.45.81 பைசாவாக இருந்தது.
அது செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரூ. 45.71 பைசாவாக உயர்ந்தது. காலையில் இந்தியரூபாயின் மதிப்பு 18 பைசா அளவுக்கு அதிகமாக இருந்தது. ஆனால், பின்னர் அதுபடிப்படியாகக் குறைந்து 10 பைசாவில் நிலைபெற்றது.
இந்திய ரூபாய்க்கு அன்னியச் செலாவணி மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் கிராக்கிதான்இந்த உயர்வுக்குக் காரணம் என்று மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ரிசர்வ் வங்கி தனது டாலருக்கு நிகரான இந்தியரூபாயின் மதிப்பை ரூ. 45.72 பைசாவாக நிர்ணயித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications