007-க்கு வயது 70
லண்டன்:
ரகசிய ஏஜெண்ட் ஜேம்ஸ்பாண்ட் 007" என்ற உலகின் பிரபலமான உளவாளியாக பலதிரைப்படங்களில் நடித்த ஸ்காட்லாண்டின் சீன் கானரி வெள்ளிக்கிழமை தனது 70-வதுபிறந்த நாளைக் கொண்டாடினார்.
உயரமான தோற்றமும், ஸ்காட்லாண்டின் கவர்ச்சியான நடிராகவும் இருப்பவர் சீன்கானரி. உலகின் மிகவும் கவர்ச்சிகரமான மனிதர் என்று கூட ஒருமுறைதேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தால் சீன்கானரிக்கு நைட் பட்டம் வழங்கப்பட்ட்து. ஆனால்தான் இங்கிலாந்துக்காரர் அல்ல. எனது நாடு ஸ்காட்லாண்டுதான் என்று கூறி பட்டத்தைஇரண்டு வருடங்களுக்குப் பிறகு துறந்தார்.
சீன் கானரி தற்போது ஸ்காட்லாண்டில் எதிர்க்கட்சியாக உள்ள ஸ்காட்டிஷ் தேசியக்கட்சியின் ஆதரவாளராக உள்ளார். ஸ்காட்லாண்ட் சுதந்திரமடைய வேண்டும்என்பதற்காகவும் குரல் கொடுத்து வருகிறார். ஆனால் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குஅவர் ஜேம்ஸ் பாண்டாகவே திகழ்கிறார்.
1962-ல் வெளியான டாக்டர் நோ" என்ற படத்தில் சீன் கானரி, ஜேம்ஸ் பாண்டாகவேவாழ்ந்து காட்டினார் என ரசிகர்கள் இன்றும் கூறுகின்றனர். எடின்பர்க் நகரின் சேரிப்பகுதியில் பிறந்து, வாழ்ந்தவர் சீன் கானரி. சவப் பெட்டிகளுக்கு பாலிஷ்போடுபவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இயான் பிளமிங் உருவாக்கிய கற்பனைப் பாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில்மொத்தம் 7 படங்களில் நடித்துள்ளார். இதில், குறிப்பிடத்தக்கவை 1964-ல் வெளியானஃப்ரம் ரஷ்யா வித் லவ், கோல்ட் ஃபிங்கர் ஆகிய என்ற இரண்டு திரைப்படங்களும்,1965ல் திரையிடப்பட்ட தண்டர்பால் என்ற படமுமாகும்.












Click it and Unblock the Notifications