தலைநகரை விட்டு வெளியேற ஆங் சென் சூயிகிக்குத் தடை
யாங்கூன் (மியான்மர்):
மியான்மர் தலைநகர் யாங்கூனை விட்டு வெளியே செல்ல அந் நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூயிகிக்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தொடர்ந்து 3-வது நாளாக சனிக்கிழமையும் அவரும் அவரது ஆதரவாளர்களும் வெளியே செல்ல முடியாமல் சாலையோரத்தில் நின்று கொண்டுள்ளனர்.
ஆங் சான் சுகியீயின் வெளியே செல்லும் சுதந்திரத்துக்கு மியான்மர் நாட்டு ராணுவ அரசு விதித்துள்ள தடை, சர்வதேச அளவில் பலத்தவிமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
ஜனநாயகத்துக்கான தேசியலீக் கட்சித் தலைவரான ஆங் சான் சுகியீயும் அவரது ஆதரவாளர்களும் தலைநகர் யாங்கூனை விட்டு வெளியே செல்லமுயன்றனர்.
ஆனால், அவர்கள் வந்த காரை டாலா டவுன்ஷிப் என்ற இடத்தில் மியான்மர் போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக அவர்கள் அங்கேயே சாலையோரத்திலேயே உள்ளனர். அவர்கள் மேற்கொண்டு செல்ல போலீஸார் அனுமதி மறுத்துவருகின்றனர்.
ஆங் சான் சுகியீக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை.அதனால்தான் அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று மியான்மர் அரசுதெரிவித்துள்ளது.
ஆனால், மியான்மர் அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங் சான் சுகீயிக்கு விதித்துள்ள தடை அவரது அடிப்படை சுதந்திரத்தையும், சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மனித உரிமையையும் மீறுவதாகஉள்ளது என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இத் தடையால் மியான்மரில் மேலும் பதற்றம்தான் ஏற்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications