ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வெல்ல கடும் போட்டி

Subscribe to Oneindia Tamil

ஹம்பர்க்:

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி ஆட்டத்தில் தங்கம் வெல்ல பல நாடுகள்போராட உள்ளன.

நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான ஹாலந்து ஆண்கள் ஹாக்கி அணி இந்த முறையும் தங்கப் பதக்கத்தை வெல்லும் முடிவில் உள்ளது. 44ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வெல்லும் கனவில் ஹாலந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் 1928-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 முறை தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்ததுஇந்தியா. இந்தியா தவிர வேறு எந்த நாடும் தொடர்ந்து இரு முறை ஹாக்கியில் தங்கம் வென்றதில்லை.

இந்திய அணி 1956-ம் ஆண்டுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கப் பதக்கம் வெல்லவில்லை. 1960-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 1-0என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது அதன் பிறகு ஹாக்கியில் தங்கப் பதக்கம் என்பது இந்தியாவுக்கு எட்டாக் கனியாகவேஇருக்கிறது.

இந்தியாவைத் தவிர பாகிஸ்தானும், ஜெர்மனியும் ஹாக்கியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாலும் தொடர்ந்து அப்பதக்கங்களை அவை வென்றதில்லை.

1960-ம் ஆண்டு இந்தியாவின் தங்க வேட்டைக்கு முற்றுப் புள்ளி வைத்த பாகிஸ்தான் அதன் பிறகு 1984-ம் ஆண்டில்தான் தங்கம் வென்றது.

சிட்னி ஒலிம்பிக்கில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அப் பிரிவில் அர்ஜென்டினா, போலந்து, தென் கொரியா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகியஅணிகள் இடம் பெற்றுள்ளன.

பி பிரிவில் ஜெர்மனி, பாகிஸ்தான், பிரிட்டன், கனடா, மலேசியா, ஹாலந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+