மருத்துவமனையில் பிரியங்கா அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி பிரசவத்துக்காக டெல்லியில் உள்ளமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியங்கா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பிரியங்காவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக பிரியங்கா டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.மருத்துவர்கள் தவிர 2 நர்சுகள் இரவும் பகலுமாகப் பிரியங்காவைக் கவனித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications