உலக விவகாரங்களில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் .. ரஷியா
மாஸ்கோ:
உலகப்பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதுஎதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என இந்தியாவுக்கான சிறப்பு ரஷ்ய தூதர்அலெக்சாண்டர் கடாக்கின் ரேடியோ பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
வாய்ஸ் ஆஃப் ரஷ்யா ரேடியோவுக்கு அலெக்சாண்டர் கடாக் அளித்த பேட்டி:
இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் உலக அரங்கில் பரவி வரும் தீவிரவாதம்போன்ற முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவும்இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
ரஷ்ய அதிபரின் இந்திய பயணத்தின்போது, கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம்குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். இரு நாடுகளும் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களை ரஷ்யாவின் உதவியுடன் புதுப்பிப்பது குறித்தும் விவாதிக்கும்.
ரஷியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு திட்டங்களில் இந்தியா அதிக அளவில்முதலீடு செய்ய வேண்டும் என்றார் கடாக்.
ரஷ்ய அதிபர் விலாடிமின் புடின் அக்டோபர் 2-ம் தேதி இந்தியாவிற்கு வர இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவும், மாஸ்கோவும் ரஷ்ய அதிபரின் வருகையின்போது கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தங்கள் குறித்து தீவிரமான விவாதத்தில்ஈடுபட்டுள்ளன.
சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் ஜோஷி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் ரஷ்ய அதிபரை சந்தித்தனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications