For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயங்கொண்டத்தில் 13-ம் தேதி அதிமுக போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 13-ம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் நிலையம் அமைக்க கையகப்படுத்திய நிலத்துக்கு நஷ்டஈடாகஏழைகளுக்கு குறைந்த பணம் கொடுத்ததை கண்டித்து வருகின்ற 13-ம் தேதி ஜெயங்கொண்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.கபொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது பற்றி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என்னுடைய ஆட்சிக்காலத்தில் ஜெயங்கொண்டத்தில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பழுப்பு நிலக்கரியை தோண்டி எடுக்கவும், அதனை பயன் படுத்திஅனல் மின் திட்டத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு இந்தியாவில் உள்ள கல்கத்தாவை சேர்ந்த பி.எம்.கைதான், ஜெர்மனியைச்சேர்ந்த சீமன்ஸ் கன்சோர்டியம் மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான டிட்கோ ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 7500 கோடி ரூபாய் செலவில் 1500 மெகாவாட்மின்சார உற்பத்திக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைப்பதில் செலவு அதிகமாகும் என்பதால் முதல் கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்குதிட்டமிடப்பட்டது.

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல் மின் திட்டதிற்கு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள காட்டாத்தூர், கூவத்துர், தண்டலை, மேலூர்,கீழக்குடியிருப்பு, தேவனூர், வாரியங்காவல், இலையூர், ஜெயங்கொண்டம், சூரியமணல், உடையார் பாளையம், எடையார் உள்பட 13 கிராமங்களில் 4,01,717ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு உத்திரவிட்டிருக்கிறது.

ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள நிலங்கள் அரசின் வழிகாட்டுதல் படி அதிகபட்ச விலையாக ஒரு ஏக்கர் தேவனூரில் 54,600 ரூபாய்க்கும், இலையூரில்1,51,400 ரூபாய்க்கும் கீழக்குடியிருப்பில் 3,67,400 ரூபாய்க்கும் , தண்டலையில் 60,000 ரூபாய்க்கும், மதிப்பீடு செய்யப்பட்டு அதற்குரிய தொகைக்குபத்திரப்பதிவு செய்யப்படவேண்டும் என்று வட்டாச்சியர் அலுவலகங்களில் வழி கூறப்பட்டு இருக்கிறது.

ஆனால் தமிழக அரசோ ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தியதில் ஏக்கர் ஒன்றுக்கு22,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று உத்திரவிட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் நிலங்களை அரசுக்கு அளித்துவிட்டுநாடோடிகளாக அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் ஆகியவற்றுக்கு நிலம் அளித்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நறுவனங்களில்வேலைவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று அரசு உத்தரவுகள் இருக்கின்றன.

அவற்றை முன் மாதிரியாக கொண்டுகூட இந்த ஜெயங்கொண்டம் திட்டத்தில் தமிழக அரசு அதைப்போன்ற ஒரு உத்தரவை பிறப்பிக்க முன்வராததுகண்டிக்கத்தக்கது.

இந்த மக்களிடம் இருந்து திட்டதிற்கு எடுக்கப்படும் நிலத்திற்கு உரிய விலை கிடைக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்காவதுவேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தி அ.தி.மு.க சார்பில் வருகிற 13-ம் தேதி அன்று ஜெயங்கொண்டம் நகரில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்ட , ஊர்வலம், விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X