For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. தலைமையில் பெரியார் விழாவா?..கருணாநிதி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

கே: கிரிமினல் வழக்கு உள்ள ஒருவரை ( நக்கீரன் ஆசிரியர்) அரசு, தன் தூதராக அனுப்புவது தவறு என்று ஜெயலலிதா கூறுவது சரிதானே...?

ப:அவர் அரசு தூதர் என்று யார் சொன்னது? வீரப்பன் தூதர்; பார்ட் டைம் அரசு தூதர். வீரப்பன் நிபந்தனைகளை எடுத்துக் கொண்டு வந்து, இரு மாநிலமுதல்வர்களிடம் இவற்றை நிறைவேற்றா விட்டால், ராஜ்குமார் திருப்பி அனுப்பப்பட மாட்டார் என்று சொல்வதே அவர் பணியாக இருந்துவந்திருக்கிறது.

வீரப்பனிடம். உன் கோரிக்கைகளை விடு என்று வாதாடுகிறபோது, இரு அரசுகளின் தூதராக மாறுவார். அப்போது வழி பிறக்கும்.

கே: வீரப்பனால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு, அம் மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்தும், அதை அவர்அலட்சியப்படுத்தியது பற்றி தங்கள் கருத்து ...?

ப: எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று வி.பி.சிங் கூடத்தான், பேசுவதற்கு வேறு விஷயம் கிடைக்காத போதெல்லாம் கூறிக் கொண்டிருகிறார்.அதனால், அவருக்கு பாதுகாப்பு வேண்டாம்- என்று அரசு தீர்மானித்ததா?

இந்த மனிதர் இமேஜுக்காக ஏதோ பேசுகிறார் ; அதை பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்து, அவருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லையா? அதேபோல் ராஜ்குமார் விஷயத்திலும் கர்நாடக அரசு நடந்து கொண்டிருக்க வேண்டியதுதானே!

கே: வீரப்பன் பேட்டியை சன் டி.வி.யில் பார்த்தீர்களா? இவ்வளவு நல்லொழுக்கமும், மனிதாபிமானமும் கொண்டவரை கேலி செய்வது தகுமா?

ப: கேலி செய்யக்கூடாது. சமாதி கட்டி கவுரவப்படுத்த வேண்டும்.

கே: எந்த அடிப்படையில் ஜெயலலிதாவை மூப்பனார் இன்னமும் நம்புகிறார்?

ப: கிருஷ்ணா தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் என்று நாம் எல்லோரும் நம்பவில்லையா? அது போலத்தான். வேறு வழியே தெரியாத போது, கனவுகாண்பது மன நிம்மதிக்கு வழி!

கே: சமாதானத்தை விரும்புகின்றவர்களைப் பார்த்து கோழைகள் என்றும், பயந்தாங்கொள்ளிகள் என்றும் கூறுபவர்களைப் பற்றி...?

ப: தகாதவர்களிடம் காட்டுகிற சமாதான அணுகுமுறை, அவர்களால் கோழைத்தனமாகக் கருதப்பட்டு விடும் - என்று ராமாயணமே கூறுகிறது.

கே: புதிய மாநிலங்களால் பிரச்சனைக்ள் மேலும் அதிகமாகும் என்ற சோனியாவின் கருத்து பற்றி ..?

ப: அவர் கூறியிருப்பது நியாயமே. மேலும் பல மாநிலங்களில் இம்மாதிரி கோரிக்கைகள் எழ இந்த புதிய மாநிலங்களின் தோற்றம், வழி செய்யும்.

ஜாதி அடிப்படையில் அந்த கோரிக்கைகைள் எழ நிறையவே வாய்ப்புண்டு. அது இன்னமும் ஆபத்து.

கே: பி.ஜே.பி.யின்அணுகுமுறையில் தெரியும் மாற்றம் உண்மையாகுமேயானால், அது வரவேற்கத்தக்கது என்று சிதம்பரத்தில் நடைபெற்ற த.மா,காசெயற்குழு கூட்டத்தில் மூப்பனார் கூறியுள்ளது பற்றி...?

ப: மூப்பனார் பேச்சின் மூலம், த.மா.கா. அணுகுமுறையில் தெரிகிற மாற்றம் உண்மையாக இருக்குமானால் - அது வரவேற்கத்தக்கது.

கே: வலிமையான ஒரு தலைவர்தான் முதல்வராக வேண்டும் - என்று ஜெயலலிதா பேசி இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: மூப்பனாரை மேடையில் வைத்துக் கொண்டு இப்படி பேசியதன் மூலம், நீங்கள் வலிமையான தலைவர் அல்ல ; நான்தான் அப்படிப்பட்ட தலைவர் என்றுஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இதையும் ஒரு பெருமையாக த.மா.கா நினைத்தால், நாம் என்ன செய்வது?

கே:குளோனிங் முறைக்கு போப் ஆண்டவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றி..?

ப: போப் அவர்கள் இதில் மட்டுமல்ல - வேறு சில விஷயங்களிலும், புதுமை என்கிற பெயரில் அடிக்கப்படுகிற கூத்துக்களை ஏற்க மறுத்துவருகிறார்.

பெண்கள் ப்ரீஸ்ட் களாவது என்ற யோசனையைப் பற்றிய அவருடைய நிலையை - இதற்கு உதாரணமாகக் கூறலாம். தான் வகிக்கிற பொறுப்புக்குகுந்தகம் வராத வகையில் அவர் இப்படி செயல்படுவது, எனக்கு அவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.

கே: சிறு தொழில்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - என்று பா.ஜ.க. தேசிய கவுன்சில், தீர்மானம் நிறைவேற்றி உள்ளது பற்றி...?

ப: ஆர்.எஸ்.எஸ். சின் ஆசியுடன் இயங்கும், சுதேசி இயக்கத்திற்கு ஒரு சின்ன அவல் உருண்டையைை பா.ஜ.க. அளித்திருக்கிறது. ஆனால், இதனால் சுதேசிஇயக்கத்தின் வாய் மூடப்படும் என்று தோன்றவில்லை.

கே; கொள்ளைக்காரர்கள் கூட, அரசியலில் நுழைந்து அரசியல்வாதியாக மாற ஆசைப்படுவது ஏன்?

ப: சினிமாவிலிருந்து ரிடையர் ஆனவர்கள், டி.வி. சீரியல்களில் நடிக்க முற்படுவதில்லையா? தெரிந்த தொழில், ஒரு மார்க்கெட்டில் சரிவு ஏற்படுகிறபோது,இடத்தை மாற்றி அதே தொழிலைச் செய்ய வேண்டியதுதானே! அதே போலத்தான், கொள்ளைக்காரர்கள் அரசியலில் புகுவதும்.

கே: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதிக்குக் கிடைக்கும் அதே வகையான மருத்துவ சிகிச்சை, கொத்தனாருக்கும் - சித்தாளுக்கும் கிடைக்கும் என்கிற ராமதாசின் பேச்சை நம்பலாமா?

ப: சரிதான். புரிகிறது. ஜனாதிபதிக்கும் மட்டமான மருத்துவ சிகிச்சை கிடைக்கிற மாதிரி செய்து விடுவார்கள் போலிருக்கிறது.

கே: எதிர்க் கட்சி வரிசையில் ஆற்றிய பணியோடு ஒப்பிட்டால், ஆளும் கட்சி வரிசையில் ஆற்றுகிற பணி, எனக்கு திருப்திகரமாக இல்லை என்றுகருணாநிதி கூறுகிறாரே?

ப: வேலை தேடி அலைந்த போது, உழைத்த உழைப்போடு ஒப்பிட்டால், வேலையில் அமர்ந்து உழைக்கிற உழைப்பின் லட்சணம் திருப்தியாகஇருக்காதுதான்.

கே: நேரமில்லை - என்று சொல்பவர்களைப் பற்றி ...?

ப: டி.வி. பார்க்க வேண்டும்;சினிமாவுக்குப் போக வேண்டும் ; வீரப்பனைப் பற்றிய செய்திகளைப் படிக்க வேண்டும்... என்று பல முக்கியமானவேலைகளைச் சுமப்பவர்களாக இருப்பார்கள். பாவம்!

கே: தமிழ்நாட்டில் இனி மின் தட்டுப்பாடு வரவே வராது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி எந்த நம்பிக்கையில் உறுதி கூறுகிறார்?

ப: அடுத்த முறை பவர் கட் வந்து இருளில் மூழ்கித் தவித்த பிறகு,கரன்ட் மீண்டும் வந்தவுடன், நாம் விடுகிற நிம்மதிப் பெருமூச்சில், இந்தப் பேச்சுஅடிபட்டுப் போய்விடும் - என்ற நம்பிக்கைதான்.

கே: மக்கள் வரிப்பணத்தை வாங்கும் ஆட்சி, அந்தப் பணத்தை அவர்களுக்கே செலவழிக்க வேண்டும்என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது பற்றி...?

ப: ஐயைய்யோ! அப்படியானால் வீரப்பன் கேட்கிற கோடிகளை எந்தப் பணத்திலிருந்து தருவது?

கே: காஷ்மீர் பிரச்சனை ஓய வேண்டும் என்றால், இந்தியாவுடன் பாகிஸ்தான் இணைய வேண்டும் என்று கூறுகிறாரே இல. கணேசன்?

ப: அதைவிட ஆபத்து, வேறொன்றும் கிடையாது.

கே: ஜெர்மனியில் வெளிநாட்டு மக்கள், நாஜி கும்பலால் தாக்கப்படுவது பற்றி...?

ப: இப்போது ஜெர்மனியில் நடப்பது, இன்னும் சில ஆண்டுகளில் வேறு சில மேற்கத்திய நாடுகளிலும் நடக்கலாம்.

கே: தமிழக அரசியலின் ஜாதகம் எப்படி இருக்கிறது ?

ப: தி.மு.க., பா.ம.க., ம.தி.மு..க., பா.ஜ.க. - ஆகிய கிரகங்கள் ஆட்சி வீட்டில் இருக்கின்றன. ஆனால், இதில் பா.ம.க. , கிரகம் அ.இ.அ.தி.மு.க.கிரக ஸ்தானத்தைப் பார்க்கிறது. அ.இ.அ.தி.மு.க. கிரகமும் பா.ம.க. கிரகத்தைப் பார்க்கிறது ;

ஆக, பரிவர்த்தனை யோகம். அ.இ.அ.தி.மு..க. வீட்டில் த.மா..கா., மார்க்சிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் ஆகிய கிரகங்கள் இருக்கின்றன. பா.ம.க.உடனான பரிவர்த்தனையினால் - த.மா.கா. இங்கிருந்து விலகி எதிர் வீட்டிற்குச் சென்றால் பரவாயில்லை என்கிற நீச ராசி மனோபாவம்அ.இ.அ.தி.மு.க. கிரகத்திற்கு அவ்வப்போது ஏற்படுகிறது.

ஆனால் பா.ம.க. கிரகத்திற்கு சீட் பரிகாரம் சிறப்பாகச் செய்யப்பட்டால். அது தி.மு.க. வீட்டிலேயே தங்கிவிடலாம். அப்படி நடந்தால் த.மா.கா.கிரகத்திற்கு அ.இ.அ.தி.மு.க. வீட்டில் மரியாதை கிட்டும்.

இப்போதைக்கு த.மா.கா. இருந்த இடத்திலும் சலனம் - போகிற வீடும் தெரியவில்லை. - என்ற நிலையில் இருக்கிறது. இதற்கிடையில் வீரப்பபெயர்ச்சி நடந்தால், தி.மு.க. பலம் பெறும். ஆனால் இப்போது வீரப்ப கிரகம் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தி.மு.க. கிரகத்திற்கு பலவீனமே.

இந்த நிலைகள்தெளிவடைய மூன்று அல்லது நான்கு மாதம் ஆகலாம். அப்போது ஜாதகத்தை மீண்டும் நீங்கள் அனுப்பி வைத்தால், பலன் சொல்லப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X