For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாய், மனம், தமிழக காங்கிரஸ்...

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அ.மு.திக.வுடனான மனப்பூர்வமான கூட்டணியை நான் ஆதரிக்கிறேன். ஆனால், அது வெறும் வாயளவில் இருந்தால் பயனில்லை என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

சென்னையில் வெள்ளிக் கிழமை அவர் அளித்த பேட்டி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தேர்தலுக்கான உறுப்பினர் சேர்க்கை வியாழக்கிழமையுடன் முடிந்தது. தலைவர்களும் மற்ற நிர்வாகிகளும் வரும்20ம் தேதிக்குள் உரிய கட்டணத்துடன் உறுப்பினர் புத்தகங்களை தமிழ்நாடு காங்கிரசிடம் ஒப்படைக்க வேணடும்.

மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. இந்த விழாவில் காங்கிரஸ் சார்பில்யாரை அழைக்க வேண்டும் என்று மூப்பனார் கேட்டார். அவரிடம் நான் சோனியாகாந்தியை அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். எங்கள்கட்சியின் சார்பில் தனியாக பெரியார் விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்விழா தொடர்பாக கடந்த முறை அ.தி.மு.க. கூட்டிய கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் தான் எனக்கு அழைப்பு வந்தது. அதனால் கலந்து கொள்ளஇயலவில்லை. அடுத்த கூட்டம் 18ம் தேதி நடக்கிறது. அதிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

காளிமுத்து மிரட்டலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும், அவர் என்னை நடமாட முடியாது என்று எச்சரித்துள்ளார். நான்எதிர்ப்புக்கும், வரவேற்புக்கும் நடைபோட்டு வரும் நூறாண்டு பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன். இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்.

ஒருவேளை தர்மபுரியில் பஸ்சில் சென்ற வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு ஏற்பட்ட கதி போல் ஆகி விடுமோ என்ற நல்லெண்ணத்தில் காளிமுத்துஅவ்வாறு கூறியிருக்கலாம். நான் வேளாண்மைக் கல்லூரி மாணவி அல்ல.

நான் கருணாநிதியின் கைக்கூலி என்று கூறும் காளிமுத்துவுக்கு, யார் கைக் கூலி, யார் கையூட்டு பெற்றது என்பதெல்லாம் நன்றாகத் தெரியும். கூட்டணிநலன் கருதி இப்பிரச்னையை நான் வளர்க்க விரும்பவில்லை.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அந்த கூட்டணி மனப்பூர்வமாக இருக்க வேண்டும். உதட்டளவில்இருக்கக் கூடாது.

எப்போதெல்லாம் காங்கிரசுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனவோ, அப்போதெல்லாம் அந்த கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனஎன்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X