For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரபலி பின்னணியில் உடல் உறுப்புகள் விற்பனை!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

நரபலி சாமியார் பற்றி வெளிவரும் ஒவ்வொரு தகவலும் மதுரை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துக்கொண்டிருக்கிறது.

இதுவரை காணமல் போனவர்கள் பற்றிய லிஸ்டையும் வைத்து விசாரித்து வருகிறோம் என்கிறார்கள் மதுரை மாநகர காவல்துறைஅதிகாரிகள்.

மதுரை அழகர்கோவில் அருகேயுள்ளது அழகாபுரி கிராமம். இந்த கிராமப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் ஆசிரமம்அமைத்து செயல்பட்டுக்கொண்டிருந்தார் நளின சேகரன் என்ற மனித அரக்கன்.

ஆசிரமத்தில் பிரதானமாக கருமாரியம்மன் கோயிலையும் ஆசிரமத்தின் நடுவிலேயே வைத்திருந்தார். பெளர்ணமி, அம்மாவாசைதினங்களில் மிக சிறப்பாக சிறப்புபூஜைகள் கொண்டாடப்படும். பெண்களும்,ஆண்களும் இந்தக் கூட்டங்களில் பயபக்தியோடுகலந்து கொள்வது வழக்கம்.

மதுரை மாநகர காவல்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் சொன்னார்,

அழகாபுரி மலையருகேயுள்ள, அழகர்மலையடிவாரத்தில் சமீபகாலமாக சிலர் செத்துக்கிடந்தனர். கிணற்றுக்குள்,மலைப்புதர்களில் என்று ஐந்து பேருக்கும் மேல் கிடந்தனர். வரிசையாக இப்படிச் சாவுகள் தொடர்வதும் ஆச்சரியமகாவேஇருந்தது.

அதிகாரிகள் மத்தியிலும் இது பற்றி ஒரு பேச்சு வந்தது. மக்களிடம் இருந்து புகார்கள் ஏதும் வரவில்லை. அதற்காக இந்தவிஷயத்தை ஒதுக்கிவிடவும் வேண்டாம். எதற்கும் அந்த மலைப் பகுதியில் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள் என்றனர் உயர்அதிகாரிகள்.

இந் நிலையில் தான் கடந்த பெளர்ணமி இரவு இளைஞர்கள் கொலைகாரர்களை பார்த்துள்ளனர். பிடித்து எங்களிடம்ஒப்படைத்தது சிறப்பான செயல். அந்த இளைஞர்கள் பாராட்டுக்குறியவர்கள் என்றார் அந்த அதிகாரி.

கடந்த 11-ம் தேதி இரவு. பெளர்ணமி நிலவில் அழாகாபுரி கிராமத்தைச்சுற்றி காவல் காத்துக்கொண்டிருந்தனர் இளைஞர்கள்.யாரோ ஆட்டோவில் வருகிறார்கள். அந்த ஊர் ஆளைக் கடத்த முயல்கிறார்கள். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த இளைஞர்கள்ஆட்டோவில் வந்திருந்த மூன்று பேரையும் தூரத்த, அதில் ஒருவன் மாட்டிக்கொண்டான்.

அவன் பெயர் அன்சாரி அலி. அன்சாரி அலியை மக்கள் பிடித்து அடித்துத் துவைத்து விசாரிக்க, அவன் சொன்ன விவரங்கள்மக்கள் நரம்புகளில் ஹைவோல்டேஜ் மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது. அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கருமாரியம்மன் மகாசக்திஆசிரமத்தில் நரபலி கொடுக்கப்படுகிறது என்கிற விஷயத்தை அன்சாரி அலி சொல்லி, அதற்காக ஆள்பிடிக்கத்தான் இங்கேவந்தேன் என்று சொல்ல அதிரச்சியில் உறைந்தது அழகாபுரி கிராமம்.

அன்சாரி அலி, கிராமக்களிடம் கொடுத்த வாக்குமூலத்தின்படி புகார் ஒன்றை தயார் செய்து அழாகாபுரி மக்கள் சார்பில் மதுரைமாநகரக் காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பலரைக் கடத்தி பூஜைக்கு பலிகொடுத்து உள்ளதாகவும், பலரது உடல்உறுப்புகளை எடுத்துவிட்டு கொன்றுவிட்டு போட்டுவிடுவோம். இதைத் தனி நபராக அவர்கள் செய்யவில்லை. இவர்களின்பின்னால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, காவல்துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

மிகப்பெரிய மருத்துவக்குழுவும் இருக்கிறது என்று அன்சாரி அலிகொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புகார்கொடுத்துள்ளனர் அந்த கிராம மக்கள்.

அழகர்மலை ஆசிரமத்தை நடத்தியவர் நளின சேகரன். இவரைப்பற்றி போலீஸார் விசாரிக்க ஆசிரமத்திற்கு வருவதற்கு முன்பே,அந்த அரக்கன் நளின சேகரன் அங்கிருந்து தலைமறைவாகியிருந்தான்.

விசாரிக்க ஆரம்பிக்க, சிவகங்கையில் அரசியல் செல்வாக்குமிக்க சாமியார் ( இவர் மீதும் ஒரு சில வழக்குகள் காவல்துறையில்பதிவானது. ஆனால், தனது அரசியல் செல்வாக்கால் தப்பித்தும் விட்டார்.) தான் நளின சேகரனுக்கு பின்னணியில் இருக்கிறார்என்று தெரிந்தவுடன் போலீஸார் சற்று திக்குமுக்காடித் தான் போனார்கள்.

ஆசிரமம் பற்றி தகவல்கள் வெளியானதும் தலைமறைவான நளின சேகரன் வெள்ளிக்கிழமை தான் மதுரை அண்ணாநகர்காவல்நிலையத்தில் சரணடைந்தான். இதுவரை எங்கேயிருந்தார் என்று விசாரிக்க, சிவகங்கை என்கிறார்கள் அதிகாரிகள். நளினசேகரனிடம் தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

இந்த ஆசிரம நரபலி வழக்கு விசாரணையில் இருக்கும் மதுரை அதிகாரி ஒருவர் சொன்னார்,

இளைஞர்கள், பெண்கள் தான் இவர்களது தேவை. இதுவரை கிடைத்ததகவலின் படி எட்டு பேருக்கு மேல் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கொலை செய்யப்பட்டவர்களை, உடலை சாதரணமாக தூக்கிப்போட்டுவிட்டுசென்றுவிடவில்லை.

ஆண்கள் என்றால் இடது மார்பை இரண்டு ரூபாய் நாணயம் அளவிற்கு கிள்ளியிருக்கிறார்கள். பெண்ணிற்கு வலது மார்பு.கண்கள், மாறுகை மாறுகால் மாதிரியும் கொலை செய்திருக்கிறார்கள். ஒருவரது உடலில் இரண்டு கை, இரண்டு கால்களுமேவெட்டப்பட்டு இருந்தது. இதுவரை கிடைத்த தகவலில் ஒரு பிச்சைக்காரப் பெண்ணையும் கொன்றிருக்கிறார்கள்.

இதெல்லாம் கூட, மார்பை வெட்டி, மாறுகை ,மாறுகால் கண்கள் என்று குத்திக்கிழித்திருப்பதற்குக் காரணம் கொலையில் இருந்துதப்பிக்கவும், தெய்வகுத்தம். காத்துகருப்பு என்று கதைகட்டிவிடவும் தான். இதன் பின்னனி சற்று பயங்கரமானதாகவே இருக்கும்என்று நினைக்கிறோம். இதில் பலருக்கும் சம்பந்தம் உள்ளதாகவே தெரிகிறது. மக்கள் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில்பார்த்தால், காவல்துறை அதிகாரிகள், மருத்துவக்குழு , அரசியல் என்று பலரை குறிப்பிட்டு கைகாட்டுகிறார்கள்.

காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் தான், இந்த வழக்கை அவசர அவசரமாக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றஉத்தரவிட்டார் முதல்வர். எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவு சீக்கிரமாக வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதில்லை.

காத்தும் இல்லை கருப்பும் இல்லை. மனிதப்பேய்கள் தான் இதன் பின்னயில் இருக்கிறார்கள். அழகாபுரி மட்டுமல்ல,வளையப்பட்டி, ஆயத்தம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இருபது பேர் வரை சேர்ந்து புகார் கொடுத்துள்ளனர். தீடீரென்றுஇன்னொரு தகவலும் எங்களை அதிரச்சியடையவைக்கிறது.

மதுரை மேலூர் அருகேயுள்ள ஏ.வள்ளாலப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த சிறுவன் பாண்டி, வயது 13.

ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த இவனை சில மாதங்களாகக் காணவில்லை. இந்த ஆசிரமத்தில் பாண்டியும்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் விசாரித்து வருகிறோம். மதுரை சுற்றுப்பட்டில் காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்துத் தேடிவருகிறோம்.இதிலிருந்து இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்பும் என்பதுதான் தெரியவில்லை என்றார் அந்த காவல்துறை அதிகாரி.

நளினி சேகரன், உட்பட நான்குபேரை இதுவரை கைது செய்திருக்கிறோம். நரபலி, காத்துக்கருப்பு இல்லையென்றால் உடல்உறுப்புக்கள் கடத்தும் வேலையில் இவர்கள் ஈடுபட்டிருப்பார்கள் என்கிற கோணத்தில் தான் எங்களது விசாரணை இருக்கிறது.

விரைவில் அழகர்மலையைச் சுற்றியுள்ள பிணங்கள் தோண்டி எடுக்கப்படும். பிறகு விசாரணை சூடுபிடிக்கும். எப்படியும் பலபெரிய தலைகள் இதில் மாட்டிக்கொள்ளும் என்பது உறுதி என்கிறார்கள் மதுரை மாநகர அதிகாரிகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X