For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

38 வருடங்கள், ஒரு தனி அறையில், தன்னந்தனிமையில் ...

By Staff
Google Oneindia Tamil News

துரிகான் (அசாம்)

அசாமில் விந்தையான, உலக இயல்பை மீறிய ஆனால் மனம் வருந்தச் செய்யும் சம்பவம் கடந்த 38வருடங்களாக நடந்துள்ளது.

யாருமே தனிமையை விரும்புவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தனிமையில் தனி அறையில் 38வருடமாக அசாமில் ஒருவர் வாழ்ந்து வருகிறார். அதற்கான காரணம் தெரியாமல் கண்ணீர்விடுகின்றனர் அவரது குடும்பத்தினர். அதைப்பற்றிய ஒரு சிறிய செய்தித் தொகுப்பு:

அசாமின் தலைநகரான குவாகாத்தியிலிருந்து 185 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு அசாமில்தேஜ்பூருக்கு அருகே அமைந்துள்ள அமைதியான கிராமம் துரிகுவான். இந்த அமைதியானகிராமத்தின் ஒரு குடும்பம் சோகச் சுமையுடன் வாழ்ந்து வருகிறது.அவர்கள் கூறும் உண்மைகள்மனத்தை உருக்குபவை.

அந்தக் குடும்பத்தின் 54 வயதான துலா போரா என்பவர் கடந்த 38 ஆண்டுகளாக தன்னைதனிமைப்படுத்திக் கொண்டு ஓர் அறையில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். அக் குடும்பத்தில் உள்ளயாருக்கும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வதற்ககான காரணம் இதுவரைசொல்லவில்லை.

1962-ம் வருடத்தின் ஓர் இனிய குளிர்காலம். அப்போது போராவுக்கு 16வயது. பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். இனிக்கும் அந்தப் பள்ளிப்பபருவத்தில்

ஒரு நாள் திடீரென அவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தனியே சென்று அமர்ந்து கொண்டு அந்தஅறையையும் பூட்டிக் கொண்டு யாரோடும் பேச மறுத்து வெற்றுச் சுவரையே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார்.

அன்று முதல் அவர் அந்த அறையில் ஐக்கியமாகி அங்கிருந்து வெளிவர மறுத்துவிட்டார்.

63 வயதான போராவின் அக்கா சந்திர பிரபா மெட்ரிகுலேஷன் தேர்வுக்காணவிண்ணப்பபடிவத்தையும் பூர்த்தி செய்ய என் தம்பி மறுத்து விட்டான். இன்றுவரை அவனுக்கு என்ன ஆனதுஎன்பது எங்களுக்குத் தெரியாது என வருத்தத்துடன் கூறுகிறார்.

இவர் தனது தம்பிக்காக, அவரை கவனித்துக்கொள்வதற்காகவே திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

போராவின் தினசரி நடவடிக்கை விந்தையானது. நாளின் அதிகபட்ச நேரத்தை அவர் தனது அறையின்மூலையில் இருக்கும் கட்டிலில் உட்கார்ந்து கழிப்பார். அல்லது தூங்கியே கழிக்கிறார்.

காலையில் சாதம் சாப்பிடுவதோடு சரி. அதன் பின்பு தண்ணீர் கூட குடிப்பதில்லை. இரவு 9 மணிக்கு இரவுச்சாப்பாடு சாப்பிட்டுவிட்டு குளித்து விட்டு மீண்டும் தன் அறைக்குள் சென்று தஞ்சமடைந்து விடுவார் எனபோராவின் தினசரி நடவடிக்கைபற்றி அவரது மைத்துனி கூறுகிறார்.

போராவின் இளைய சகோதரரே இது வரை போராவை பராமரித்து வருகிறார்.

இந்த கிராமத்தில் உள்ளவர்கள் போரா புதியவர்களுடன் பேச மாட்டார்.அவரை சமானப்படுத்திஇணங்க வைத்தாலும் அதிகமாக பேச மாட்டார் என்கிறார்கள்.

போராவின் கண்பார்வையும் குறைந்து விட்டது. மிகவும் மெலிவாகவும், சோர்வுடனும்காணப்படுகிறார்.

நான் எனது பழைய வாழக்கை பற்றி எண்ண விரும்பவில்லை. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையும்,கஷ்டமுமே என்னை தனிமையாக வாழ தூண்டியது. ஆனால் நான் இதற்காக வருத்தப்படவில்லை.

எனது பள்ளிக்கால நண்பர்களையும் எனது உறவினர்களையும் இன்னும் மறக்கவில்லை. எனது கடைசிகாலத்திற்காக, எனது மரணத்திற்கான நாட்களை நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன் என கண்களில்கண்ணீர் வழிய கூறுகிறார் போரா.

அவரது பள்ளி நண்பர்களும், கிராமத்தில் வசிக்கும் பலரும் முயன்றும் போராவை அவரதுதனிமையிலிருந்து மீட்க இயலவவில்லை. எது அவரை தனிமையில் வாழத் தூண்டியது எனத் தெரியவில்லைஎன்கிறார் அந்த கிராமத்தில் வாழும் போகாராம் தாஸ் என்பவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X