For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40,000 கர்நாடகத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

By Staff
Google Oneindia Tamil News

அமாவாசை மாதிரி அவ்வப்போது வந்து போகிற - அரசியல் சட்டம் 356-வது ஷரத்து பற்றிய விவாதம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்தமுறை இந்த அமாவாசைக்குக் காரணமாகி இருப்பது மேற்கு வங்க நிலைமை.

மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மேற்கு வங்கம் சென்று திரும்பி, அங்கு நிலைமை பிகாரை விட மோசம் என்று கூறுகிற அறிக்கை ஒன்றைஉள்துறை அமைச்சர் அத்வானியிடம் சமர்பித்தார்.

எதிர்பார்த்தபடியே ஜோதிபாசு பொங்கி எழுந்தார். பத்திரிக்கைகளும் கூட, பொதுவாத மேற்கு வங்க அரசின் சார்பில் மறுப்பு தெரிவித்திருக்கின்றன.

பத்திரிக்கையின் இந்தப் பரிவு வியப்புக்குரியதல்ல. வலதுசாரி என்ற முத்திரை பதிந்து விடுமோ என்ற அச்சம், பத்திரிக்கை உலகில் நன்றாக வேரூன்றிகிடக்கிறது.

இந்த வலதுசாரி முத்திரை வந்தால், அதைத் தொடர்ந்து பிற்போக்குவாத லேபிளும் ஒட்டப்பட்டு விடும். இன்று மத்தியில் ஆட்சி புரிவது பா.ஜ.க.என்பதால், இந்துமத வெறி என்ற பட்டமும் கிடைத்து விடும். இந்த அச்சம் இல்லாத பத்திரிக்கைகள் ஏதாவது ஒரு சில தேறலாம்.அவ்வளவுதான்.

இந்த முத்திரை, லேபிள், பட்டம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் அதற்குச் சுருக்கு வழி, மார்க்சிஸ்ட்டுகளை ஆதரித்துவிட வேண்டியதுதான்.

அவர்கள்தான் இடதுசாரி, முற்போக்குவாதி, மதச்சார்பின்மையாளர் சர்டிபிகேட்டுகளை வழங்குகிற ஸ்தாபனத்தை நடத்துகிறவர்கள். இதனால் பத்திரிக்கைஉலகம் ஜோதிபாசு அரசுக்கு வக்காலத்து வாங்கி நிற்பதில் ஆச்சரியமில்லைதான்.

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு கிடக்கிறது என்பது நன்றாகவே தெரிகிற விஷயம். அதுவும் மம்தா பானர்ஜி தலைதூக்கியதிலிருந்து,மார்க்சிஸ்ட் அரசுக்குக் கடும் கோபம் வந்திருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக கொலைகள் நடப்பதும், வன்முறை சம்பவங்கள் நிகழ்வதும் அங்கே சர்வ சகஜமாகி வருகின்றன. இதைத்தவிர, தேர்தல்களில்மார்க்சிஸ்ட்டுகள், தொடர்ந்து கள்ள ஓட்டுப் போட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக இருக்கிறது. தங்களுக்கு ஆதரவில்லாதபகுதிகளில் அவர்களே ஓட்டுக்களை கொத்து கொத்தாக பெட்டிகளில் திணித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் தேர்தல் நடக்கும்போது மார்க்சிஸ்ட்கள் பதவியில் இருந்தால், தேர்தல் தில்லுமுல்லு நிறையவே நடக்கும் என்ற அச்சம் பல அரசியல்கட்சிகளுக்கும் இருக்கிறது. மம்தா பானர்ஜிக்கு இந்தக் கவலை நிறையவே இருக்கிறது.

இதனாலும், மார்க்சிஸ்ட்டுகள் அவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையின் காரணமாகவும், மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிபிரகடனமாக வேண்டும் என்று கோருகிறார். 356-ஐ துஷ்பிரயோகம் செய்வதா என்று ஜோதிபாசுவும், மற்றவர்களும் கடும் எதிர்ப்புதெரிவிக்கிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிற கட்சிகளிடையே கூட, ஒரு சில கட்சிகள், ஜனாதிபதி ஆட்சி பிரகடனத்தை எதிர்க்கக் கூடும். 356-வது ஷரத்தேஅரசியல் சட்டத்திலிருந்து அழிக்கப்பட வேண்டும் - என்று கூறி வருகிற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்றன ; ஆகையால் 356பிரயோகம் என்பது ரொம்பவும் கடினம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X