ஒலிம்பிக்கில் இந்தியா
எப்படியோ தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தி, மேற்கு வங்கத்தில் ஜனாதிபதிஆட்சி பிரகடனம் ஆகிறது என்றே வைத்துக் கொள்வோம். ராஜ்ய சபையில் பா.ஜ.க. கூட்டணிக்குமெஜாரிட்டி இல்லாத நிலையில் பாராளுமன்ற ஒப்புதலைப் பெறுவது எப்படி?
காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களை எதிர்த்தாலும், மத்தியில் பா.ஜ.க.வைஎதிர்ப்பதால், இரண்டும் கெட்டான் நிலையில் திண்டாடுகிறது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்களை ஆதரித்து விட்டால், அந்த மாநில அரசியலில் தங்களுக்கென்றுஒரு தனி இடம் இல்லாமலேயே போய்விடும் என்ற ஆபத்து ஒரு புறம் ; அதற்காக பா.ஜ.க. கூட்டணிஅரசின் நடவடிக்கையை ஆதரித்து விட்டால், மதச்சார்பு தீட்டு வந்து சேர்ந்து விடும் என்ற பயங்கரம்மற்றொருபுறம்.
இந்த இரண்டு ஆபத்துக்களையும் ஒரு சேர தவிர்ப்பதற்கு வழி தெரியாமல் காங்கிரஸ் திண்டாடுகிறது.பீகாரில் இதே மாதிரி தவித்தபோது, இறுதியில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனத்தை எதிர்ப்பது என்றுதான்காங்கிரஸ் தீர்மானித்தது.
இப்போதும் அதே முடிவிற்குத்தான் காங்கிரஸ் வரும். முன்பு பீகாரில் செய்தது போல, ஆனது ஆகட்டும்என்று தீர்மானித்து, ஜனாதிபதி ஆட்சி பிரகடனத்தைச் செய்துவிட பா.ஜ.க. முனையாது ; பீகாரில் சூடுகண்டதால், இப்போது காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் இக்காரியத்தில் இறங்க பா.ஜ.க. துணியாது.ஆகையால் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் என்பது பேச்சளவில்தான் நிற்கும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு சில மணிநேரங்கள் மேற்கு வங்கத்த்தில்இருந்து விட்டு, ஒரு கடுமையான அறிக்கையை சமர்பிப்பது என்பது கொஞ்சம் வினோதமாகத்தான்இருக்கிறது.
மம்தா பானர்ஜியை திருப்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு இருப்பதால்தான்,இம்மாதிரி நடந்திருக்கிறது என்பது கண்கூடு. ஆக, இந்த விஷயத்தில் இரு தரப்புகளுமே பெருமைப்பட்டுக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாமே வடிகட்டன அரசியல்தானே தவிர வேறில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications