For Daily Alerts
ஒலிம்பிக்கில் இந்தியா
இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பியுள்ளது. மொத்தம் 117 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.
மொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 14 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்படும் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கால்பந்து, ஜூடோ, படகுப் போட்டி, பாய்மரப் படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியா போட்டியிடுகிறது.
செப்டம்பர் 24-ல் இந்தியா கலந்து கொள்ள உள்ள போட்டிப் பிரிவுகள் விவரம் :
மல்யுத்தம்:
- 63 கிலோ எடைப் பிரிவில் (கிரெகோ ரோமன்) அல்ஜீரியாவின் யாஷீன் ஜக்கீருடன் மோதுகிறார் இந்தியாவின் குர்பிந்தர் சிங் - காலை 4.30.
- 81 கிலோ எடைப்பிரிவில் இரண்டாவது சுற்றில் டான்னி வென்டெருடன் மோதுகிறார் குர்சரண் சிங் - காலை 7.30.
- பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் - அரையிறுதிச் சுற்று - இந்தியாவின் பீனாமோல் பங்கேற்பு - பிற்பகல் 2.30.
- பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டி (ஈட்டி எறிதல், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டம்) - இந்தியாவின் பரிமளா, சீமா பிஸ்வாஸ் பங்கேற்பு - காலை 8.00.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!