For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 1.5 கோடி முட்டைகள் அழிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை மாவட்டத்தில் பிராய்லர் கோழிகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக பிராய்லர் கோழி விலையில் வீழ்ச்சிஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த பிராய்லர்ஸ் கோஆர்டினேசன் கமிட்டி உரிய நேரத்தில் செயல்பட்டு உற்பத்திக்கும் தேவைக்கும் உள்ளஇடைவெளியை சரிக் கட்டியது. இதனால், இந்த தொழில் ஓரளவு நிலை பெற்றுள்ளது.

சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கருமுட்டைகளை அழித்து, உற்பத்தியைஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திக் கொண்டது. சுமார், 25 லட்சம் முட்டைகளைஅழித்ததன் மூலம் 50 லட்சம் கிலோ கோழி உற்பத்தி நிறுத்தப்பட்டது. அழிக்கப்பட்டமுட்டையின் மதிப்பு மட்டுமே ஒன்றரை கோடி ரூபாயாகும்.

ஒரு கிலோ கறிக் கோழி உற்பத்தி செலவு ரூ. 28 ஆக உயர்ந்தது. ஆனால் விலைவீழ்ச்சியால் விற்பனை விலை கிலோ ஒன்றிற்கு ரூ. 25 ஆக மட்டுமே இருந்தது.இதனால், இந்த இழப்பீட்டை சரிக் கட்ட பிராய்லர் கோ ஆர்டினேசன் கமிட்டிஎனப்படும் பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் சங்கம், முட்டைகளை அழிக்க முடிவுசெய்தது.

கோவை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் தான் அதிகபட்சமாக கோழிஉற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் கோழி பொரும்பாலனவை (50சதவீதத்திற்கும் மேல்) கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அவ்வாறு கோழியை எடுத்துச் செல்ல கேரள அரசு வரி விதித்தது. இந்த வரியுடன்வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரி ஆகியவை கேரளாவில் கறிக் கோழியின்விலையை உயர்த்தியது.

உற்பத்தி அதிகரித்து கறிக் கோழியின் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும், சில்லறைவிற்பனையில் பொதுமக்கள் எவ்விதப் பயனும் அடையவில்லை.

தொடர்ந்து பிராய்லர் கோழியின் விலை ரூ. 30 என்ற அளவிலேயே இருந்தது. எனவே,இந்த தொழில் வேளாண்மை சார்ந்த தொழிலாளாக இருந்ததால் விவசாயிகளேதொடர்ந்து பாதிப்டைந்துள்ளனர்.

கோழியைப் பொறுத்தவரை ஏற்றுமதிக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். கறிக்கோழியைப் பதப்படுத்த போதுமான தொழில்நுட்பம், உற்பத்தி செலவு, தரம்ஆகியவற்றில் இந்தியக் கோழிகள் அயல்நாட்டுக் கோழிகளை விட, பின் தங்கியநிலையிலேயே உள்ளது. எனவே, சர்வதேசச் சந்தையில், போட்டி போடும் அளவிற்குகோழி இல்லை.

அமெரிக்க நிறுவனத்தின் கெண்டகிச் சிக்கனுக்கு எதிராக இந்தியக் கோழிகளின் தரம்நிற்காது என்பதே நிதர்சன உண்மை. கெண்டகிச் சிக்கன் இந்தியாவிற்குள் நுழைந்தால்,இந்தியக் கோழிகள் அழியும் என்பதே உண்மை.

எனவே, எதிர்காலத்தில் சர்வதேசப் பொருளாதாரத் தாரளமயமாக்கத்தின் போது,பிராய்லர் கோழி உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்பதில்ஐயமில்லை.

அழவைக்கும் வெங்காயம்

கோவை மாவட்டத்தில் பல்லடம், குண்டடம், உடுமலைப் பேட்டைப் பகுதிகளில்அதிகம் விளையும் பொருட்களில் வெங்காயம் குறிப்பிடத்தக்கது.

வெங்காய விலையில் சூடுபட்ட பாரதிய ஜனதா அரசு இன்னும் அந்த "அதிர்ச்சியில்இருந்து மீளவில்லை. ஏக்கர் ஒன்றிற்கு 20 டன் வரை பெரிய வெங்காயம்,இப்பகுதியில் இந்த ஆண்டு விளைந்துள்ளது.

அளவுக்கு மீறிய உற்பத்தி வெங்காயத்திலும் உண்டு. வாரம் ஒன்றிற்கு 6 ஆயிரம் டன்வெங்காயம் வரை இப்பகுதியிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்வதுண்டு.

ஆனால், மகராஷ்டிராவிலும் இந்த முறை வெங்காய உற்பத்தி அதிகரித்ததைத்தொடர்ந்து தமிழகத்தில் வெங்காயம் தேக்கநிலையை அடைந்துள்ளது.

சில லட்சம் டன்களை மட்டும் அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதித்திருந்தாலும்,இது உடனடியாக அமலுக்கு வரவில்லை. எனவே, விவசாயிகளுக்கு இதனால் எவ்விதபயனும் இல்லை.

ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு வியாபாரிகள் மட்டுமே இதில் பயனடையப்போகின்றனர். ஏற்கனவே பல வியாபாரிகள் வெங்காயத்தை வாங்கிக் குவித்துவருகின்றனர். விலை ஏற்றத்தின் போதோ, ஏற்றுமதிக்கு அனுமதி கிடைக்கும்போதோஇவர்கள் லாபம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

வெங்காயம் உற்பத்தி செலவு கிலோ ஒன்றிற்கு ரூ. 2.50 ஆக இருந்து வருகிறது.ஆனால் விற்பனை விலை கிலோ ரூ. 1. 50 என்ற அளவிலேயே உள்ளது.பொதுமக்களுக்கு இதுவே சில்லறை விலைக்கு வரும்போது ரூ. 3 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, பல லட்சம் டன் வெங்காயம் இங்கு தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சற்றுபொருளாதாரத்தில் மேம்பட்டுள்ள விவசாயிகள் மட்டுமே வெங்காயத்தை விற்பனைசெய்யாமல் பாதுகாத்து வருகின்றனர்.

புதுடெல்லியில் பா.ஜ., ஆட்சியின் வீழ்ச்சி கற்றுக் கொடுத்த பாடம், ஏற்றுமதிக்குத்தடையாக அமைந்துள்ளது.

மஞ்சள், கரும்பு

ஈரோடு மாவட்டம், நெல்லும், கரும்பும், மஞ்சளுமாக வளம் கொழிக்கும் மாவட்டம்.இந்த மாவட்டத்தில் மஞ்சளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை.

மஞ்சள் டன் ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது டன்ஒன்றிற்கு ஆயிரத்து 500 முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையே கிடைக்கிறது.மஞ்சளை விட இங்கு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது, கரும்பு தான்.

மாநில அரசு டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்தது. ஆனால், இது 8.5சதவீதத்திற்கும் மேல் பிழி திறன் உள்ள கரும்பிற்கு மட்டுமே கிடைக்கும். தமிழகத்தில்பெரும்பாலான இடங்களில் இந்த சதவீதத்தை எட்டிப் பிடிப்பது மிகவும் கடினம் தான்.எனவே, இந்தப் பகுதி விவசாயிகளுக்கு இது வெறும் கண் துடைப்பாகவே உள்ளது.

அதோடு ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட கரும்பிற்கு சர்க்கரை ஆலைகள் பணப்பட்டுவாடா செய்யவில்லை. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும்விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

சர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தவரை ஆலைகளில் சர்க்கரை அதிக அளவு இருப்புஇருந்தாலும், சில்லறை விற்பனையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த முடியவில்லை.இதற்கு உற்பத்தி செலவு அதிகரித்திருப்பது இந்த மாற்றம் ஏற்பாடாமல் தடுத்துநிறுத்தியுள்ளது.

கரும்பின் பிழி திறனை அதிகரித்தால் மட்டுமே கட்டுபடியான விலை விவசாயிகளுக்குகிடைக்கும். கரும்பு கொள்முதலுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படாததுவிவசாயிகள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தேயிலை:

நீலகிரி மாவட்டத்தில் பெரும் அரசியல் திருப்பத்தையே ஏற்படுத்தியுள்ள பிரச்னைதேயிலைப் பிரச்னை.

ரஷ்யாவிற்கும், வெளிநாடுகளுக்கும் தேயிலை கணிசமான அளவுஏற்றுமதியானபோது விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது. ரஷ்யாபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த பிறகு நீலகிரித் தேயிலைக்கு மவுசு குறைந்துபோனது.

கடந்த 96-97ம் ஆண்டுகளில் பச்சைத் தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ. 15 முதல் 20வரை கிடைத்தது. தற்போது இந்த விலை கிலோ ஒன்றிற்கு 5 ரூபாய் என்றஅளவிலேயே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அரசு வழங்கும் மானியம் கிலோஒன்றிற்கு ரூ. 1.25 ஆக மட்டுமே உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தேயிலை உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளது.தேயிலை பறிக்கக் கூலி, மற்றும் பயிர் பராமரிப்பு செலவுகள் உயர்ந்துள்ளது. எனவே,பச்சைத் தேயிலை உற்பத்தி செலவு கிலோ ஒன்றிற்கு பத்து ரூபாய் வரைஉயர்ந்துள்ளது.

ஆனால் அரசு வழங்கி வரும் மானியம், எவ்வளவு நாட்களுக்கு என்பதுகேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் தேயிலை, தரம் வாய்ந்ததாக இருந்தாலும்,அதிக அளவில் இறக்குமதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தியஉற்பத்தியில் 0.5 சதவீதம் மட்டுமே இந்த இறக்குமதி உள்ளது.

இதுவரை நீலகிரி விவசாயிகளுக்கு 7 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா என்பது அடுத்தஆண்டில் வெளிப்படும்.

முடிவாக,

கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் பல்வேறு விவசாயப் பிரச்னைகளில் சிக்கித்திணறினாலும், நீலகிரியைத் தவிர மற்ற இரு மாவட்டங்களும் அரசியல் ரீதியாகஎவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நீலகிரியில் விவசாயிகள் ஒன்று பட்டதால் ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடி நிலைஏற்பட்டது. இந்த மாவட்டத்திலிருந்து தி.மு.க.விற்கு மீண்டும் சட்டசபையில் இடம்கிடைப்பது சந்தேகத்திற்குரியதே. இங்கு காங்கிரசின் கை மேலோங்கியுள்ளது.அ.தி.மு.க.,வுடன் கூட்டணி ஏற்பட்டால், இங்கு வெற்றி உறுதியாகும்.

மற்ற இரு மாவட்டங்களிலும் விவசாயிகளிடையே பெறும் எதிர்ப்பு எதுவும் இல்லாதநிலையில், வழக்கமாக கடைசி நிமிட மாற்றங்களுடன் அரசியல் கட்சிகள்இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X