For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

20 ஆண்டுகளில் "ஆன்லைன் கண் ஆபரேஷன் சாத்தியம்!

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

அடுத்த 20 ஆண்டுகளில் இன்டெர்நெட் மூலம் "ஆன்லைன் கண் ஆபரேஷன் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்று கோவையில் நடந்த கருத்தரங்கில்தெரிவிக்கப்பட்டது.

கோவையில் "காட்ராக்ட் மற்றும் கண்ணொளி அறுவை சிகிச்சை பற்றிய கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கிற்கு "ஐ பவுண்டேஷன் மற்றும்லாசிக் சென்டர் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மையத்தின் தலைமை டாக்டர் ராஜேந்திரன் கருத்தரங்கில் பேசியதாவது:

இந்த நூற்றாண்டின் துவக்கம், தகவல் தொழில்நுட்பத்தில் அடியெடுத்து வைக்கிறது. கம்ப்யூட்டர், ரோபாட் மற்றும் மின்னணுத் துறை வேகமாகப்பயன்பாட்டிற்கு வந்து கொண்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியே ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு "நீர்க் கத்தி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய கருவிகள் வருங்காலத்தில் இன்னும் நிறைய உருவாகும்வாய்ப்பு ஏற்படும்.

விசா, கிரெடிட் கார்டுகளைப் போல, ஹெல்த் கார்டுகள் வருங்காலத்தில் உருவாகும். இந்த கார்டுகளில் ஒருவரது உடல் நலம் மற்றும் டாக்டரின்அறிவுரைகள் அனைத்தும் பதிவு செய்யப்படலாம்.

இந்த கார்டை உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும், எடுத்துச் சென்று இன்டர்நெட் மூலம் டாக்டரைத் தொடர்பு கொண்டு சிகிச்சை பெறலாம்.

சிகிச்சை அளிக்கும் டாக்டர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அந்த இடத்திலேயே இருந்து கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்.

இந்த கார்டின் மூலம் கண் அறுவை சிகிச்சையை ரோபாட்டுகள் மூலம் பெறலாம். இவை கற்பனை போல தோன்றினாலும், எதிர்காலத்தில்உண்மையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்றார்.

கருத்தரங்கைத் துவக்கி வைத்து எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அனந்தக் கண்ணன் பேசியதாவது:

எதிர்வரும் ஆண்டுகளில் மருத்துவத் துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. சர்வதேச ஒப்பந்தம் இதற்கு ஒரு கரணமாக இருக்கலாம்.மருத்துவத்தின் தரம் இதன் மூலம் உயர வாய்ப்பு உள்ளது.

இந்திய மருந்துகளின் தரம், உலகத் தரம் வாய்ந்ததாக விளங்கும். இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றார்.

கருத்தரங்கிற்கு வந்தவர்களை டாக்டர் ராமமூர்த்தி வரவேற்றார். டாக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X