For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏன் பிரம்மோற்சவம் கொண்டாடுகிறோம்?

By Staff
Google Oneindia Tamil News

ஆர். சுந்தர பாஸ்கர்

Balajiதிருமலை திருப்பதியில் கடந்த 4 நாட்களாக பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடந்து வருகிறது.

திருமலை திருப்பதி கோயிலில் குடிகொண்டு தன்னை நாள் தோறும் நாடி வரும் கோடிக்கணக்கான பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வள்ளலாகத்திகழ்கிறார் ஏழுமலை ஆண்டவன் திருவேங்கடக் கடவுள் வெங்கடாஜலபதி.

அவருக்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் 9 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். இந்த 9 நாட்களும் மக்கள் வெள்ளம்அலை மோதும். கடந்த 4 நாட்களாக எங்கு நோக்கினும் மக்கள் தலைகள், தலைகள். மலை முழுவதும் கோவிந்தா, கோவிந்தா என்றகோஷம் எதிரொலிக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதிவலம் வரும் பெருமாள் பக்தர்கள் கூட்டத்திற்கு காட்சியளித்து அருள் பாலிப்பது கண்கொள்ளாக்காட்சி.

வெங்கடாஜலபதிக்கு இந்த பிரம்மோற்சவம் நடப்பது குறித்து புராணக்கதை ஒன்று உண்டு. அதை அறிந்த பின்பு 9 நாள் பிரம்மோற்சவம் குறித்துமேலும் அறிவோம்.

நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது. மும்மூர்த்திகளில் யாருக்காக முனிவர்கள் யாகம் செய்ய வேண்டும், இந்த மூவரில் யாகத்தை ஏற்றுக் கொள்ளும்சாந்தமான மூர்த்தி யார் என முனிவர்களிடம் கேள்வி எழுப்பினார் நாரதர்.

இதையடுத்து பிருகு முனிவர் என்பவர் மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என அறிய விண்ணுலகம் சென்றார். பிரம்மாவையும், சிவனையும் சோதித்து அவர்கள்சிறந்தவர்கள் என அறிந்து கொண்டு வைகுந்தம் சென்றார்.

நேராக விஷ்ணுவிடம் சென்று அவர் மார்பில் உதைத்தார். நாராயணன் பொறுமையாக என்னை உதைத்ததால் தங்கள் கால்களுக்கு வலிஏற்பட்டிருக்குமே என கவலையுடன் கூறினார். அதைக் கேட்ட பிருகு முனிவர் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார். பெருமாளும் அவரை மன்னித்தார்.

முனிவர்கள் செய்யும் யாகங்களை பெற சிறந்த மூர்த்தி மாகவிஷ்ணுவே என பிருகு முனிவர் தீர்ப்பளித்தார்.

ஆனால், நாராயணின் மனைவிக்கு கடும் கோபம் வந்தது. நாராயணனிடம் கேட்டாள் தேவி, நான் உங்கள் நெஞ்சில் குடியிருக்கிறேன். உங்களை நெஞ்சில்உதைத்தது என்னை உதைத்தது போலாகும் நீங்கள் அவரை தண்டிக்காமல் மன்னித்து விட்டீர்களே.

Balaji ஒரு நல்ல காரியத்ததை நிறைவேற்றவே அவர் இது போல் நடந்து கொண்டுள்ளார் என பதில் சொன்னான் நாராயணன்.

ஆனால் அவரது சமாதானத்தை லட்சுமி ஏற்கவில்லை. கோபித்துக் கொண்டு பூலோகம் சென்று விட்டார்.

இதனால் வருத்தமடைந்த நாரயணனும் பூலோகம் வந்தார். லட்சுமியைத் தேடி அலைந்த நாராயணன் திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்தார். அங்குவகுளாதேவியை தனது தாயாக பாவித்து அவருடன் வசித்து வந்தார்.

துவாபாரயுகத்தில், கண்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கொள்வது குறித்து அனைவரும் வருத்தமடைந்தனர். கண்ணன் அவர்களிடம், நீங்கள் அனைவரும்கலியுகத்தில் என்னோடு வாழ்வீக்கள் என வரமளிததார்.

கண்ணனை வளர்த்த யசோதா கண்ணனின் இரு திருமணத்தை காண இயலவில்லை. அது குறித்து வருந்திய யசாாேதவிடம் கலியுகத்தில் திருவேங்கடத்தில்திருவேங்கடத்தான் உருவில் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன்.

நீங்கள் வகுளாதேவி உருவெடுத்த அங்கு எழுந்தருளியுள்ள வராக மூர்த்தியை வழிபட்டு வாருங்கள் நான் உங்களை அங்குசந்திக்கிறேன் என திருவாய் மலர்ந்தருளினார் கண்ணன.

யசோதை அதன்படி தன் உடலை விட்டு கலியுகத்தில் வகுளாதேலியாக அவதாரம் எடுத்தாள்.

வகுளா தேவி நாரயணனை சீனிவாசன் என அன்புடன் அழைத்து வந்தார்.

Balajiசீனிவாசன் வேட்டைககுச் சென்ற இடத்தில் பத்மாவதியைச் சந்தித்து அவள் மேல் மையல் கொள்கிறார். பத்மாவதியும் சீனிவாசன் மேல் விருப்பம்கொள்கிறார்.

இவர்கள் விருப்பத்தை அறிந்த பத்மாவதியின் தந்தை ஆகாச மன்னன் அவர்கள் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தார்.

ஆகாச மன்னன் மரணமடைந்த பின் அவரது சகோதரரர் தொண்டைமான், சீனிவாசனிடம் உங்களை எத்தனை தரிசித்தும் திருப்தி ஏற்படவில்லை. நீங்கள் தயைகூர்ந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டான்.

சீனிவாசன் உன் அண்ணன் பிரம்மச்சாரியாக இருந்த என்னை சம்சாரியாக்கினார். இந்த உலகில் எனக்கு தங்க இடமில்லை. எனவே எனக்கு கோவில்கட்டி வை என்றார்.

சீனிவாசன் ஓர் இடத்தைக் குறிப்பிட்டுக்காட்டி இங்கு கோவில கட்டு எனக் கூறினார்.

பிரம்ம தேவன் முதலிய தேவர்கள், வைணவத் தொண்டர்கள், வேதம் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் அனைவரும் பங்கேற்க ஆனந்த நிலையம் என்றுபெயரிடப்பட்ட கோயிலில் சீனிவாசனும் பத்மாவதியும் பிரவேசித்தனர்.

பிரம்மதேவர், சீனிவாசனிடம் நீங்கள் கலியுகம் முழுவதும் தங்களை காண வரும் பக்தர்கள் பாவங்களை தீர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வேங் என்றால் பாவம், கடா என்றால் தீர்த்துவைக்கும் சக்தி என்று கூறிய சீனிவாசன், இந்த இடம் வேங்கடா என அழைக்கப்படட்டும்என்றார். சீனிவாசனும் வேங்கடேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.

இதையடுத்து இந்த ஆலயத்துக்கு விழா எடுக்க பிரம்மன் விரும்பினார். சீனிவாசனிடம் சென்று நாங்கள் இப்போது நடத்தவிருக்கும் விழாவுக்குசம்மதிக்க வேண்டும் என்றார். இதற்கு வேங்கடநாதனும் சம்மதித்தார். பிரம்மனும், தேவர்களும் இணைந்து நடத்திய அந்த விழா தான்பிரம்மோற்சவம். இது தான் பிரம்மோற்சவம் தொடங்கிய வரலாறு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X