For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனிடமிருந்து தப்பிய நாகப்பாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி மனு தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து தப்பி வந்த நாகப்பாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று கோரிகர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹொட்டேபக்ஷி ரங்கசாமி என்பவர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த இந்த பொதுநலன் கோரும் மனுவைஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி கர்நாடக மாநில டிஜிபி தினகருக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் 100 முறைக்கு மேல் மனுத்தாக்கல் செய்து அனைத்து முறையும்டெபாசிட் தொகையை இழந்தவரான ஹொட்டேபக்ஷி ரங்கசாமி தாக்கல் செய்த அந்த மனு விவரம்:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார், கர்நாடக மாநில மக்களால் தெய்வமாகமதிக்கப்படுகிறார்.

ராஜ்குமாருக்குத் தற்போது 72 வயதாகிறது. மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். ராஜ்குமார் கடத்தப்பட்டுஏறக்குறைய 68 நாட்கள் ஆகிவிட்டது. கர்நாடக மாநில முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

கன்னட திரைப்பட உலகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக அரசுக்குக் கோடிக்கணக்கானரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தை தமிழக அரசுதான் திட்டமிட்டு நடத்தியுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறஉள்ள நிலை சுயநலத்துக்கான தமிழக முதல்வர் கருணாநிதிதான் இதைச் செய்துள்ளார்.

மேலும், இந்த கடத்தல் நாடகம் முடிக்கப்படாமல் கர்நாடக அரசை தமிழக அரசு பிளாக்மெயில் செய்து வருகிறது.

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கும், ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கும் தமிழக அரசு ரூ.500 கோடிஇழப்பீடு தரவேண்டும்.

வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்த உதவி டைரக்டர் நாகப்பா, எப்படி தப்பி வந்தார் என்பது குறித்து முரண்பட்டதகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மை என்னவென்று தெரியவில்லை.

போலீஸ் நிர்ப்பந்தம் காரணமாகவே நாகப்பா உண்மையைச் சொல்லாமல் இருக்கிறார். அவரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினால் உண்மை நிலவரம் தெரியவரும்.

ஆகவே, நாகப்பாவை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீஸாருக்கு உத்தரவிடவேண்டும்என்று அந்த மனுவில் ரங்கசாமி கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் ஸ்ரீதர் ராவ், சீனிவாச ரெட்டி இருவரும், இம் மனுவுக்குப் பதில்அளிக்கும்படி கர்நாடக டிஜிபி தினகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ராஜ்குமார் உள்பட 4 பேரை ஜூலை 30-ம் தேதி இரவு சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றான்.கடத்தப்பட்டவர்களை விடுவிக்கும் முயற்சியில் கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் முயற்சிகளைமேற்கொண்டுள்ளன.

இந் நிலையில், சில நாட்களுக்கு முன் வீரப்பன் கடத்திச் சென்ற 4 பேரில் ஒருவரான உதவி டைரக்டர் நாகப்பாமட்டும் தப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X