For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தமிழர் பண்பாட்டைக் காக்கிறார் வீரப்பன்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

நடிகர் ராஜ்குமாரையும், பிற பிணைக் கைதிகளையும் மரியாதையாக நடத்தி வருவதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டைக் காக்கிறார் வீரப்பன் என்றுகர்நாடக தமிழர் இயக்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

வீரப்பனின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகக் காரணம் காட்டி, வீரப்பனுடன் உள்ள தமிழ்த் தீவிரவாதி மாறனின் ஆதரவாளர்கள் புத்தகம்வெளியிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படவுள்ள இந்த புத்தகத்தில் வீரப்பன் செயலை நியாயப்படுத்தியும், கர்நாடகத் தமிழர்கள் படும்பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் 22 பக்கங்கள் உள்ளன. முன் அட்டையில், நடிகர் ராஜ்குமார் கடத்தல், வீரப்பன் கோரிக்கைகள் ஒரு கண்ணோட்டம் என்றும், பின்அட்டையில் வீரப்பன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் படமும் அச்சிடப்பட்டுள்ளன.

காவிரிபிரச்சனை, வள்ளுவர் சிலை திறப்பு விவகாரம், காவிரிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ராஜ்குமார் மற்றும் அவரது ரசிகர்கள்,தமிழர்களுக்கு எதிராக எழுப்பிய கோஷங்கள் உள்பட பல விஷயங்கள் அக்குவேறு, ஆணிவேறாக விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தில் வீரப்பன் பெரும்பாலும் தனது கோரிக்கைகளை, செயல்களை நியாயப்படுத்திருக்கிறார். புள்ளி விவரங்களுடன் வீரப்பனது நடவடிக்கைகள்மற்றும் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து இலவசமாக இப்புத்தகத்தை விநியோகிக்க மாறன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய தூதர் நெடுமாறன் மூலம் இப்புத்தகம் விநியோகிக்கப்பட இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் விலை 5 ரூபாய் என்று அச்சிடப்பட்டிருந்தாலும்,இலவசமாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நரபலி வாங்குபவன், தந்தங்களைச் சூறையாடுபவன், சந்தனமரக்கள்ளன் என்று வீரப்பனைக் கொச்சைப்படுத்துவதையும், வீரப்பனின் கோரிக்கைகளைஅலட்சியப்படுத்துவதையும் முட்டாள்தனம் என்பதை விளக்குவதே என்பதே இப்புத்தகத்தின் நோக்கமாகும் என்று அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

புத்தகத்தில் வீரப்பன் தமிழன் என்ற தலைப்பின் கீழ் வெளியாகியுள்ள விவரங்கள் வருமாறு:

வீரப்பன் கர்நாடக எல்லைப்பகுதியிலுள்ள கோபிநத்தத்தில் பிறந்தவர். கர்நாடக வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. ஆகவேவீரப்பன் ஒரு கர்நாடகத் தமிழர்.

கர்நாடக அரசியல்வாதிகளும், கன்னட மக்களும், வீரப்பனை ஒரு குற்றவாளி என்று பார்க்காமல் தமிழன் என்ற கண்ணோடு பார்த்து அவர் மேல்சேற்றை வாரிப் பூசுகிறார்கள்.

140 கொலைகள், 1000 க்கும் மேற்பட்ட யானைகளையும், சந்தனமரங்களையும் வெட்டிச் சாய்த்த கொடுமைக்கார வீரப்பன், தன்னைக்காப்பாற்றிக் கொள்ள வழிதேடாமல் பழுத்த அரசியல்வாதி போல் தன்னைக் காட்டிக்கொள்கிறான் என்று வினா எழுப்பி வருபவர்கள் சிலர்.

ஆனால், தன் மீது சராமரியாக அள்ளி வீசப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும், வீரப்பன் தலைவணங்கி, பழிவாங்கும் சந்தர்ப்பம் கிடைத்த போதும்கூட, ராஜ்குமாரையும், அவரது சகாக்களையும் மனித நேயத்துடன் நடத்தி வருகிறார் வீரப்பன். இதுதான் தமிழர் பண்பாடு என்று அப்புத்தகத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X