For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியமைக்க இலங்கையில் கடும் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில், தொங்கு பாராளுமன்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ள நிலையில், தங்களால் ஆட்சி அமைக்க முடியும் என்று அதிபர் சந்திரிகாவின் மக்கள்கூட்டணியும், விக்கிரசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துள்ளது. வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இன்னும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

தேர்தலில் 109 இடங்களில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்த இடங்கள் 225.

இந்த எண்ணிக்கையைக் கொண்டு சுயேச்சையாக ஆட்சி அமைக்க முடியாது. இருப்பினும், தமிழ் கட்சியான ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன்ஆட்சியமைக்க முடியும் என்று மக்கள் கூட்டணி நம்பிக்கையுடன் உள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு 90 இடங்கள் கிடைத்துள்ளன. மீதமுள்ள இடங்களை இடது சாரி மக்கள் விடுதலை முன்னணி மற்றும்தமிழ்க் கட்சிக் பகிர்ந்து கொண்டுள்ளன.

இந்தத் தேர்தலில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி தனிப் பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது.சிங்களவாத ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முக்கிய தமிழ் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 5இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே, தங்களது கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது. ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (4 எம்.பிக்கள்) ஆதரவுடன் ஆட்சியமைக்கஉள்ளோம் என மக்கள் கூட்டணி கூறியுள்ளது. ஈ.பி.டி.பி. கட்சி யாழ்ப்பாணத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கூட்டணித் தலைவரும், விளையாட்டு அமைச்சருமான திசநாயகே இதுகுறித்துக் கூறுகையில், ஈழம் மக்கள் கட்சியின் ஆதரவுடன் நாங்கள்தான்ஆட்சியமைப்போம். இன்றோ (வியாழக்கிழமை) அல்லது நாளையோ நாங்கள் ஆட்சி அமைக்கலாம் என்றார் அவர்.

இருப்பினும் இவர்களது ஆட்சியமைக்கும் கனவு அவ்வளவு எளிதில் நிறைவேறாது என்று கூறப்படுகிறது. காரணம் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்.இக்கட்சி, மக்கள் கூட்டணியில்தான் இருக்கிறது.

சுயேச்சையாக நின்று 3 இடங்களிலும், மக்கள் கூட்டணியிலிருந்து 4 இடங்களையும் வென்றுள்ளது. யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து இக்கட்சிஇன்னும் முடிவெடுக்கவில்லை.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் இணைத் தலைவர் ராப் ஹக்கீம் கூறுகையில், ஆதரவு கோரி மக்கள் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எங்களைஅணுகியுள்ளனர். இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவர்களிடம் கூறியுள்ளோம் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சியமைக்கும் ஆர்வத்தில் உள்ளது. சிறிய பிராந்தியக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம் என அக்கட்சி நம்பிக்கைதெரிவித்துள்ளது. ஜனநாயகக் கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைப்போம் எனவும் அக்கட்சி கூறியுள்ளது.

இக்கட்சிக்கு நிம்மதி தரும் வகையில், ஐந்து தொகுதிகளை வென்றுள்ள தமிழ் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளது.

சிங்கள தீவிரவாத அமைப்பாக இருந்து அரசியல் கட்சியாக மாறியுள்ள ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிதான் இப்போது அனைவரது கவனத்தையும்கவர்ந்துள்ளது. மொத்தம் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இக்கட்சியின் ஆதரவு, ஆட்சி அமைக்க விரும்பும் கட்சிக்கு மிகவும்முக்கியமானதாகியிருக்கிறது.

இக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் விமல் வீரவன்சா கூறுகையில், இது தேர்தலே கிடையாது. முறைகேடுகள், திட்டமிட்ட சதிச் செயல்களுடன் நடந்த இந்ததேர்தலை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

எந்தக் கூட்டணிக்கும் நாங்கள் ஆதரவு தர மாட்டோம். இருப்பினும் நாடாளுமன்றத்தில ஆக்கப்பூர்வமாக செயல்பட மக்கள் எங்களுக்கு அதிகாரம்வழங்கியுள்ளனர். அதை சரியாகப் பயன்படுத்தி, நாடு பிளவுபடாமல் தடுப்பதற்காக பாடுபடுவோம் என்றார்.

இதற்கிடையே, தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் மீண்டும் வாக்குப் பதிவு நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. கண்டி முழுவதும் போர்க்களம் போல காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் காரு ஜெயசூர்யா கூறியுள்ளார்.

இலங்கை தேர்தல் விதிப்படி, நேரடியாக யாரும் எம்.பியாக முடியாது. ஒரு கட்சிக்குக் கிடைக்கும் மொத்த வாக்குகள் விகிதத்தைக் கணக்கில் கொண்டேசீட்டுகள் ஒதுக்கப்படும்.

இலங்கைத் தேர்தல் குறித்து காமன்வெல்த் செயலாளர் டான் மெக்கினான் கூறுகையில், தேர்தலின்போது பெருமளவு வன்முறை வெடித்தது. பல வாக்குச்சாவடிகளில் பல முறைகேடுகள் நடந்தன.

இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தேர்தல் மிகவும் நல்லபடியாகவே நடந்தது என்றார். தேர்தலின்போது பார்வையாளர்களாகசெயல்பட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.கொழும்பு:

ஐ.ஏ.என்.எஸ்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X