மருமகனைக் கொல்ல முயன்ற மாமனார் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த மருமகனை கொல்ல வாழைப்பழத்தில்விஷம் கலந்து கொடுத்த மாமனார் கைது செய்யப்பட்டார்.

சேலம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல்ஆச்சாரி. இவரது மகன் செல்வமணி (40). நகைக் கடை வைத்துள்ளார்.செல்வமணியின் மனைவி திலகம் (35). இவர்களுக்கு வனிதா (20) என்ற மகளும்கிருஷ்ணன்(7) என்ற மகனும் உள்ளனர்.

மகள் வனிதாவை சங்ககிரி அருகே உள்ள அம்மாப்பேட்டையை சேர்ந்தபாலகிருஷ்ணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர் லாரிகளுக்குபாடி கட்டும் வேலை செய்து வருகிறார். தற்போது வனிதா கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில் செல்வமணிக்கும், அவரது மனைவி திலகத்திற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் வளர்ந்தன.இதனால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள செல்வமணி விரும்பினார்.

அதன்படி புரோக்கர்கள் மூலம் கேரளாவில் பெண் பார்க்க ஆரம்பித்தார். கேரளாவில்இருந்து பெண் வீட்டடாரும் செல்வமணியை சந்தித்துப் பேசி விட்டுச் சென்றனர். இதுஎதுவும் மனைவி திலகத்திற்கு தெரியாது. விஷயம் தெரிந்ததும் திலகம், கணவனின்இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்தார். கணவருடன் தகராறுஏற்பட்டது.

மருமகன் பாலகிருஷ்ணனை சந்தித்து விஷயத்தை சொல்லி இரண்டாவது திருமணத்தைதடுக்கும்படி சொன்னார். அவரும் மாமனாரை சந்தித்து கடுமையாக ஆட்சேபித்தார்.இதனால் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நான்உயிரோடு இருக்கும் வரை உங்களை இரண்டாவது திருமணம் செய்ய விடமாட்டேன்என்று சவால் விட்டுச் சென்றார் மருமகன்.

இதனால் மாமனார் ஒரு முடிவுக்கு வந்தார். மருமகனை சமாதானம் செய்வது போல்அவரது வீட்டுக்குப் போனார். அங்கு இரவு சாப்பாட்டை இருவரும் சாப்பிட்டுமுடித்தனர். வெளியே போய் மருமகனுக்காக வாழைப்பழம் வாங்கி வந்தார். அதைமருமகனிடம் கொடுத்தார்.

பழத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மருமகன் மயக்கம் போட்டு விழுந்தார். எதுவும்தெரியாததுபோல் அவரை கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால்,அங்கு நடந்த பரிசோதனையில் வாழைப்பழத்தில் விஷம் கலந்திருந்த விஷயம்வெளிச்சத்துக்கு வந்தது.

போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோடு வாழைப்பழ ரகசியத்தை மாமனார் ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+