ஈவ் டீசிங்கை எதிர்த்த மாணவர் கொலை
விழுப்புரம்:
விழுப்புரத்தில் மாணவியைக் கேலி செய்ததைத் தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர்கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து வந்தவர் புஷ்பராஜ். கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாராய வியாபாரி இருசப்பன். திங்கள்கிழமை கலைக்கல்லூரி வளாகத்தில் இருசப்பனும், இன்னும் சிலரும் சேர்ந்து மாணவிகளை கேலிசெய்துள்ளனர்.
இதை கல்லூரி மாணவர் தலைவர் முரளி, புஷ்பராஜ் இன்னும் சில மாணவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.விஷயம் காவல் நிலையம் வரை சென்றது.
இரு தரப்பினரையும் அழைத்த போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கல்லூரி முடிந்து மாலையில் புஷ்பராஜ், தனது நண்பர்களுடன் வீடுதிரும்பினார். அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த இருசப்பனும், அவரது கும்பலும்புஷ்பராஜைக் கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த புஷ்பராஜ் பாண்டிச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.
மாணவர் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்ட தகவலையடுத்து விழுப்புரம் நகரில்பரபரப்பு ஏற்பட்டது. பஸ் நிலையப் பகுதியில், சிலர் கடைகளை மூடச் சொல்லிவற்புறுத்தினர். நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு இடத்தில்நடந்த கல்வீச்சில் செஞ்சி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 2 லட்சம் உதவித் தொகை:
மாணவர் புஷ்பராஜ் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியாளர்ராமச்சந்திரன் ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறு உத்தரவிட்டார். மாவட்டபோலீஸ் எஸ்.பி. ரவியின் பரிந்துரையின்பேரில் இந்த உதவித் தொகைவழங்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications