முதல்வர் தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு புதிய குழு
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமையில் 35 புதிய உறுப்பினர்கள்கொண்டு புதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
இளைஞர் நலம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி (பொது), இந்தியகைப்பந்து சங்கத் தலைவர் சிவந்தி ஆதித்தன் (நிர்வாகம்) ஆகியோர் துணைத் தலைவர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர்களாக சென்னை மேயர் ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன்,நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருட்டிணன், தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, போலீஸ் டி.ஜி.பி. சர்மா,சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கை சிவம், மதிவாணன், ராஜ்குமார் மன்றாடியார், முன்னாள் கிரிக்கெட் வீரர்ஸ்ரீகாந்த், இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன், முன்னாள் செஸ் வீரர் மனுவேல் ஆரோன்,முன்னாள் ஹாக்கி வீரர் பிலிப்ஸ், டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட 35 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.