டி.எம்.எஸ் உள்பட 4 பேருக்கு ட தமிழ்ச் செம்மல் விருது
மதுரை:
திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் உள்பட நான்கு பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்க, மதுரை காமராஜர் பல்கலைக்கழகஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக்குழுக் கூட்டம் துணைவேந்தர் சாலிஹூ தலைமையில் சனிக்கிழமை நடந்தது. மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறையில் ஆய்வுகள் மேற்கொண்ட 20 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கிட ஆட்சிக் குழுக் கூட்டத்தில் அனுமதிஅளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கல்வித்துறை செயலர் மணிவண்ணன், சட்டச் செயலர் பார்த்தசாரதி, கல்லூரி கல்வித்துறை இயக்குநர் விக்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியன், திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், திருக்குறள்சாரங்கபாணி, நாகூர் எம்.ஹனிபா ஆகியோருக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்க ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்தது.












Click it and Unblock the Notifications