ரஷ்யாவில் புத்தர் கோவில்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முதன்முதலாக புத்தர் கோவில் கட்டப்படவுள்ளது.
மாஸ்கோவில் புத்தர் கோவில் கட்ட வேண்டும் என்று புத்தர் கொள்கைகளில் பற்றுடையவர்கள் மற்றும் புத்தர் மதத்தைச் சேர்ந்தவர்கள் விருப்பம்தெரிவித்திருந்தனர். மாஸ்கோவிலுள்ள உயர்அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு அவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதைப் பரிசீலித்த மாஸ்கோ நகர் நிர்வாகம், புத்தர் கோவில் கட்ட அனுமதி அளித்துள்ளது. மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் இந்தக் கோவில்கட்டப்படும். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் 2001 ம் ஆண்டு தொடங்கும்.
புத்தர் கோவில் அமைக்கும் பணிக்காக புத்த குருமார்கள் அடங்கிய தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவைச் சேர்ந்தவர்கள் கோவில்கட்டுவதற்கான நிதி திரட்டும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அரசுச் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications