For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் ஜில் என்று ஒரு தீ!

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

தீபாவளி...இந்தக் கனவுத் திருவிழாவுக்கு இந்தியா இப்போது தான் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால்,அமெரிக்கா அதை கொண்டாடியே முடித்துவிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்ஹாட்டன் மகிழ்ச்சியில் திணறிக் கொண்டிருந்தது. ஜொலித்தது.வானவேடிக்கைகளும், இந்திய பாடல்களும், இந்திய இசையும் மன்ஹாட்டன்வாசிகளின் மனதைக்கொள்ளையடித்தன.

மன்ஹாட்டன் ஸீபோர்ட் செளத் ஸ்டீரிட்டில் நடந்த இந்த தீபாவளித் திருவிழாவில் எங்கு பார்த்தாலும் உற்சாகம்,முகங்களில் பிரகாசம். ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்துபோய் வெற்றிகளைக் குவிப்பதற்காக ஒவ்வொருமணித்துளியையும் உழைப்பாக மாற்றி வரும் அந்த இந்தியர்கள் மகழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தார்கள்.

பட்டுச்சேலைகளில், வேஷ்டி சட்டைகளில், பைஜாமா குர்தாக்களில் இந்தியர்கள் குழுமினார்கள்.இந்திய-அமெரிக்க சங்கத்தின் நியூயார்க் சாப்டர் இந்த விழாவை நடத்தியது. கடந்க 14 ஆண்டுகளாகவேதீபாவளியை இப்படித்தான் சுடச்சுடக் கொண்டாடி வருகிறது இந்த சங்கம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கிய கொண்டாடங்கள் இரவு வரைக்கும் நீடித்தது.

எப்போதுமே தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன் தான் இந்த விழா நடப்பது வழக்கம். ஆனால், இம்முறை ஒருமாதம் முன்னதாகவே விழாவைக் கொண்டாடியது இந்தச் சங்கம். அடுத்த மாதம் பனி கொட்ட ஆரம்பித்துவிடும்என்பதாலும், இந்தியாவிலிருந்து அழைத்துவரப்படும் மூத்த இசைக் கலைஞர்கள் இந்தப் பனியில்சிரமப்படுவார்கள் என்பதாலும் நிகழ்ச்சி ஒரு மாதத்துக்கு அட்வான்ஸ் செய்யப்பட்டது.

பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் மதிப்பது தானே இந்திய நாகரீகம். அதை செயலில் செய்து காட்டனார்கள்இந்த மன்ஹாட்டன்வாசிகள். இந்திய தேசியகீதம், அமெரிக்க தேசியகீதத்தை இசைத்த பின்னர் விழாவைஅட்டகாசமாய் துவக்கினார்கள். மனதில் பெருமிதமும், சந்தோஷமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டுக் கொள்ளமகிழ்ச்சியில் திணறிக் கொண்டிருந்தனர் இந்த இந்தியர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலாச்சார மையங்களில் பயின்று வரும் இந்தியக் குழந்தைகளின் நடனம் தான்நிகழ்ச்சியின ஹைலைட். ஈஸ்ட்வெஸ்ட் ஸ்கூல் ஆப் டான்ஸ், சதனாலயா அகாடமி, நிருத்யானந்தா, வைஷ்ணவ்ஆலயம், கலா சக்தி. வெஸ்ட்செஸ்டர் பேலட் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் இசை-நாட்டியநிகழ்ச்சிகளை வழங்கினர்.

குழந்தைகளுக்கு டி-சர்டுகள் வழங்கப்பட்டன. அதில் என்ன வேண்டுமானாலும் வரைந்து கொள்ளலாம் என்றுசுதந்திரம் கொடுக்கப்பட குண்டக்க மண்டக்க படம் வரைந்து தள்ளின அந்த வாண்டுகள். பிறகு இவர்களுக்கெனதனியாக பல போட்டிகளும் நடந்தன.

இந்தியர்களைவிட அமெரிக்க இளைஞர்-இளைஞிகளின் பட்டாளம் தான் அதிக எண்ணிக்கையில் விழாவில்கலந்து கொண்டு ரசித்தது.

அந்த மாகாணத்தின் மேயர் ருடால்ப் குயிலானி தனது சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பி விழாவுக்கு மரியாதைசெய்தார். அதோடு இல்லாமல் நியுயார்க்கில் அக்டோபர் 1ம் தேதியை இந்திய தினமாக அறிவித்துஅனைவரையும் உணர்ச்சிவசப்படச் செய்தார்.

இந்தி நடிகை தீப்தி நாவல் அரங்கத்தில் நுழைந்தபோது அங்கிருந்த அனைவரும் தங்கள் வயதை மறந்தார்கள்.உலக அழகி லாரா தத்தா வந்தபோது தங்களையே மறந்தார்கள்.

பிட்ஸ்பர்க், போஸ்டன், மிட்வெஸ்ட் என்று பல தூரங்களில் இருந்தும் வந்து குவிந்தனர் இந்தியர்கள். நிகழ்ச்சிநடந்த இடத்தில் இந்திய உணவு விற்கும் கடைகள், இந்திய அழகு சாதனக் கடைகள், இந்திய உடைகள் விற்கும்கடைகள் என எல்லாமே இந்திய மணம்.

இங்கு கடை போட அமெரிக்க நிறுவனங்களுக்குள்ளேயும் போட்டி. இது இந்தியர்களின் வாங்கும் திறனையும்அவர்களது செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது என்கிறார் நிகழ்ச்சியை நடத்திய ஷா.

நிகழ்ச்சியின் வெயிட்டான விஷயமே இரவில் நடந்த வாணவேடிக்கை தான். இந்திய வெடிகள், ராக்கெட்டுகள்,புஸ்வானங்களால் அந்த கிழக்கு நதிக்கரை இரவிலேயே விடிந்து போனது. 20 நிமிடங்களுக்கு பகலாகவே மாறிப்போனது அந்தப் பகுதி.

இந்த வெடிகள் உருவாக்கிய தீ என்னவே ஜில்லென்றே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து கலையும்போது அனைவர்கண்களிலும் ஈரம். அதை மறைக்க முற்பட்டுத் தோற்றார்கள். சந்தோஷமாய் சத்தமாகவே அழுதார்கள். ஆனந்தமேஉன் பெயர் கண்ணீரா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X