அமெரிக்கா: 3வது முறையாக எண்ணப்படும் வாக்குகள்
டல்லஹஸ்ஸி (புளோரிடா):
புளோரிடாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்த 2 கவுண்டிகளில் மீண்டும் ஒருமுறை (3வது முறையாக) வாக்குஎண்ணிக்கை நடந்து வருகிறது.
ஆனால், இம் முறை கருவிகளைப் பயன்படுத்தாமல் கைகளால் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
பாம் பீச் கவுண்டியில் வாக்குச் சீட்டில் குழப்பம் நிலவியதால் தவறாக வாக்களிக்கப்பட்டு 19,000 வாக்குகள்நிராகரிக்கப்பட்டதால் அங்கு மீண்டும் ஒரு முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.
குழப்பம் ஏன்?
வாக்குச் சீட்டில் அல்கோரின் பெயரும் ரிபார்ம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பேட் பட்சனனின் பெயரும் ஒரேவரிசையில் அமைந்துள்ளன. வாக்களிக்கும் இடத்தில் அமைந்திருக்க வேண்டிய புள்ளிகளும் கிட்டத்தட்டநெருக்கமாக அமைந்துள்ளன.
யாருக்கு வாக்களிக்க நினைக்கிறார்களோ அந்தப் புள்ளியில் துளையிட வேண்டும்.
இரு புள்ளிகளும் அருகருகே இருந்ததால் அல்கோருக்கு வாக்களிப்பதாக நினைத்துக் கொண்டு பேட் பச்சனனுக்குபலர் வாக்களித்துள்ளனர்.
இது தவிர மேலும் பலர் இரு புள்ளிகளுக்கும் இடையே துளையிட்டுள்ளனர். இவ்வாறு செலுத்தப்பட்டவாக்குகளை வாக்கு எண்ணும் இயந்திரங்கள் செல்லாத ஓட்டுகளாக நிராகரித்துவிடும்.
பாம் பீச் கவுண்டியில் சுமார் 19,000 வாக்குகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குகளில்பெரும்பான்மையானவை அல்கோருக்கு போய் சேர்ந்திருக்க வேண்டியவை எனத் தெரிகிறது.
வாக்கு அளித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி பார்த்தால் அல்கோர் அதிகஎண்ணிக்கை வித்தியாசத்தில் புளோரிடாவில் வென்றிருக்க வேண்டும். ஆனால், அல்கோர் பின்தங்கியிருப்பதால்,வாக்குச் சீட்டுகள் மீது தான் குற்றம் சுமத்தப்பட்ட வருகிறது. குறிப்பாக பாம் பீச் கவுண்டியில் நிராகரிக்கப்பட்டவாக்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டன.
இந்த சீட்டுகளை இயந்திரங்கள் நிராகரித்துவிடும் என்பதால் இவற்றை கையால் எண்ண இப்போது முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, இங்கு எல்லா வாக்குகளையும் சேர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கைதுவங்கியுள்ளது. இது இரண்டாவது முறையாக நடக்கும் மறுவாக்கு எண்ணிக்கையாகும்.
வலூசியாவலும் கைகளால் வாக்கு எண்ணிக்கை:
அதே போல புளோரிடாவில் உளள வலூசியா கவுண்டியிலும் வாக்குகள் மூன்றாவது முறையாகஎண்ணப்படுகின்றன. இங்கு சுமார் 1,83,256 வாக்குகள் உள்ளன.
மியாமி டேட்டிலும் கையால் வாக்கு எண்ண கோரிக்கை:
இந் நிலையில் புளோரிடாவில் மியாமி-டேட்டிலும் வாக்குகளை கையால் எண்ண வேண்டும் என கோர் கட்சிகேட்டுக் கொண்டுள்ளது.
நியூ மெக்சிகோவில் 17 ஓட்டு தான் வித்தியாசம்:
நியூமெக்சிக்கோவில் அல்கோரை விட புஷ் 17 ஓட்டுக்கள் அதிகம் பெற்றுள்ளார். இன்னும் இங்கு 300 ஓட்டுக்கள்எண்ணப்பட வேண்டும். எனவே, இங்கும் மீண்டும் ஒரு மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்த எண்ணிக்கைய கையால் நடக்கும். கருவிகள் பயன்படுத்தப்படாது.
ஒரெகான் மாகாணத்திலும் இருவரும் சம பலத்தில் உள்ளனர்.
மேலும் மேலும் குழப்பம்:
இதே நிலைமை தொடர்ந்தால் மேலும் பல இடங்களிலும் கையால் வாக்குகளை எண்ணக் கோரிக்கைவிடுக்கப்படும் எனத் தெரிகிறது. இது தவிர தபால் ஓட்டுக்கள், நீதிமன்ற வழக்குகள் என இன்னும் பல குண்டுகள்வெடிக்கக் காத்திருக்கின்றன.
அடுத்த தேர்தலுக்கு முன்பாவது யாராவது ஒருவர் அதிபரானால் சரி என்ன நிலைமைக்கு வந்துவிட்டனர் பலஅமெரிக்கர்கள்.
தமிழ் டிவி சானல்களின் தொடர் நாடகங்களையே மிஞ்சும் அளவுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு இழுத்துக்கொண்டே செல்கிறது.
குழப்பம் புளோரிடாவில் மட்டுமில்லை...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications