For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழப்பம் புளோரிடாவில் மட்டுமில்லை...

By Staff
Google Oneindia Tamil News

புளோரிடா:

புளோரிடா குழப்பத்தில் அமெரிக்காவே திணறிப் போய் உள்ள நிலையில் நியூமெக்சிக்கோ, ஒரெகான் மாகாண வாக்குகளிலும்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நியூமெக்சிக்கோவில் அல்கோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அல்கோர் வெறும் 199 வாக்கு வித்தியாசத்தில்தான் ஜார்ஜ் புஷ்ஷை வென்றுள்ளார். எனவே, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது தவிர நியூமெக்சிக்கோவில் வெலன்சியா கவுண்டியில் தேர்தல் அதிகாரியாக இருப்பவரே தேர்தலில் போட்டியிட்டுள்ளதால்அங்கு வாக்கு எண்ணிக்கை முடிவில் சந்தேகம் எழுந்துள்ளதாக குடியரசுக் கட்சியினர் கூறுகின்றனர்.

வெலன்சியா மற்றும் டோனா ஆகிய கவுண்டிகளின் வாக்குகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில்அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால் நியூமெக்சிக்கோவில் வெற்றி பெற்ற அல்கோர் அதை தக்க வைத்துக்கொள்வதில் பிரச்சனை தோன்றியுள்ளது.

குப்பையில் கிடந்த வாக்குகள்:

நியூமெக்சிக்கோவின் பெர்னாலிலோ கவுண்டியில் 257 வாக்குச் சீட்டுகள் காணாமல் போய்விட்டன. அதிகாரிகள் அதைத்தேடியபோது அவை குப்பைகள் குவிக்கப்பட்ட ஒரு கிடங்கில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை இப்போது தான்எண்ணப்பட்டு வருகின்றன.

நியூமெக்சிகோவில் 5 எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. ஏற்கனவே புளோரிடாவில் புஷ்சிடம் தடுமாறி வரும்அல்கோருக்கு இந்த 5 இடங்கள் மிக மிக முக்கியமானவை.

ஒரெகான்:

அதே போல ஒரெகான் மாகாணத்திலும் அல்கோர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஜார்ஜ் புஷ்ஷை விட முன்னணியில்உள்ளார். 2,800 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வென்றால் அங்கும் மறு வாக்கு எண்ணிக்கை நடக்கும். இப்போது5,973 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் கோர். ஆனால், இன்னும் 28,500 வாக்குகள் எண்ணப்பட வேண்டும்.இங்கு 7 எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன.

அதிபராக தயாராகிறார் புஷ்:

சில இடங்களில் இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது உண்மை தான். புளோரிடா மறுவாக்கு எண்ணிக்கையில்வென்றுவிட்டோம். இதனால் அடுத்து ஆட்சியை அமைக்க நான் தயாராகி வருகிறேன் என்றார் புஷ். இப்போது இவர் டெக்ஸாஸ்மாகாண கவர்னராக உள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும், வெளிநாட்டு உறவுகள் குறித்தும் அதிகாரிகள்,நிபுணர்களுடன் அவர் வெள்ளிக்கிழமை ஆலோசனையும் நடத்தினார்.

கோர் கட்சி எதிர்ப்பு:

ஆனால், புஷ்சின் இந்த செயல்களுக்கு கோர் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இன்னும் வாக்கு எண்ணிக்கையே முடியவில்லை.அதற்கு அடுத்த ஜனாதிபதி போல புஷ் நடந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என கோர் கட்சியினர் கூறுகின்றனர்.வெளிநாடுகளில் வசிக்கும் புளோரிடாவாசிகளின் வாக்குகள் வரும் 17 ம் தேதி தான் எண்ணி முடிக்கப்படும். அதுவரை யாரும்வென்றதாகக் கூற முடியாது என்பது இவர்களின் வாதம்.

இது தவிர புளோரிடாவில் பாம் பீச் கவுண்டியில் மீண்டும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இங்கு 19,000 வாக்குகள் உள்ளன.எனவே, இப்போதே புஷ் கட்சி ஆட்டம் போட வேண்டியதில்லை என்கிறது அல் கோர் தரப்பு.

724 வாக்கு வித்தியாசத்தில் புஷ் முன்னிலை:

இந் நிலையில் சனிக்கிழமை வரை புளோரிடாவில் உள்ள 65 கவுண்டிகளில் 62ல் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன.இப்போது 724 வாக்குகள் வித்தியாசத்தில் புஷ் முன்னிலை வகிக்கிறார். நேற்று 327 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில்இருந்தார். இன்று மேலும் வாக்குகளை பெற்றுள்ளார்.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை கோருவதையும், முடிவை எதிர்த்து நீதிமன்றம்செல்வதையும் அல்கோர் கட்சி நிறுத்த வேண்டும் என குடியரசுக் கட்சி கோரியுள்ளது.

ஆனால், தவறான வாக்கு எண்ணிக்கை, தவறான் தேர்தல் முறையால் அதிபர் பதவியை இழக்கத் தயாராக இல்லை என அல்கோர்கட்சி கூறுகிறது.

அமெரிக்காவில் நிலவும் குழப்பத்துக்கு முத்தாய்ப்பு வைப்பது மாதிரி பேசியிருக்கிறார் நியூஜெர்சியின் செனட்டர் ராபர்ட்டொரிசெல்லி. இந்தத் தேர்தலில் அல்கோர் வெல்ல வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது யாராவதுஒருவர் வென்றால் போதும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டேன் என்கிறார்.

இதையே அமெரிக்காவின் மார்க்கெட் நிலவரமும் கூறுகிறது. தேர்தல் முடிவு குழப்பம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கசந்தையில் ஸ்திரமற்ற நிலைமை நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X