For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடைக்கானல், ஒசூரில் சரணாலயங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்பத்தூர்:

தமிழ்நாட்டில் 7 விலங்குகள் சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக வனத் துறை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி சித்திரப்பூதெரிவித்தார்.

கோவையில் தமிழக வனத் துறை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி சித்திரப்பூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொடைக்கானல், சுஜால்குட்டை, ஒசூர் உட்பட 7 இடங்களில் வன விலங்குகள் சரணாலயம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த வனவிலங்குகள் நன்கு பராமரிக்கப்படும்.

தற்போதைய வனச் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பானவிளக்கத்தை மத்திய அரசிடம் மாநில அரசு கோரியுள்ளது.

தென்மாநில அளவில் வன வளம் மற்றும் மழை வளத்தில் தமிழகம் பின் தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. தமிழகத்தில் வனவளத்தை பெருக்கி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படம் இதனை உறுதி செய்துள்ளது.வனப்பகுதியின் பரப்பளவு அதிகரித்துள்ளதையும் புகைப்படம் தெளிவாக்கியுள்ளது.

இந்தியாவிலேயே தமிழக வனத்துறை மட்டுமே சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களைக்கொண்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ளதைப் போலவே கோவை, ஈரோடு மாவட்டங்களில் மலையோர விவசாயப் பகுதியில் வன விலங்குகள்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே வனவிலங்குகளைத் தடுக்க குறைந்த மின் அழுத்தத்தில் உள்ள வேலி அமைக்க வனத்துறை முடிவுசெய்துள்ளது.

மலையோரங்களில் வன விலங்குகள் உள்ள இடங்களில் கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிடக் கூடாது. அவ்வாறுபயிரிடும்போது இது வன விலங்களுக்கு வரவேற்பு அளிப்பதாக உள்ளது. மலைப் பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறைஏற்படும் சமயத்தில் வனப் பகுதியிலிருந்து விலங்குகள் சமவெளிப் பகுதிக்கு வருகின்றன.

யானைகளின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. 72ம் ஆண்டில் அதிகமான யானைகள் இருந்ததால் ஏலம் விடப்பட்டன. ஆனால்இப்போது இந்த திட்டம் எதுவும் இல்லை. வனப்பகுதியில் தந்தள்ள யானைகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு விட்டன. இதனால்பெண் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்னா என்ற தந்தமில்லா யானையின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

யானைகளால் சேதம் ஏற்படும்போது ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கைமேற்கொண்டு வருகிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X