பெங்களூரில் தீவிர பாதுகாப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை
பெங்களூர்:
ராஜ்குமார் விடுதலையையடுத்து தமிழர்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என அஞ்சப்படுவதால், பெங்களூரில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக வியாழக்கிழமையன்று பெங்களூரில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நகர காவல்துறை கமிஷ்னர் மடியால் கூறுகையில்,
38 கர்நாடக ரிசர்வ் போலீஸ் பிளட்டூன்களும், 18 பாரா மிலிட்டரிப் படைப் பிரிவுகளும், 35 பெங்களூர் ஆயுதப்படைப் படைப் பிரிவுகளும் பெங்களூர் முழுவதும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவர்கள் தவிர 4,000 நகர போலீசார், அதிகாரிகள், 300 ஊர்க் காவல் படையினரும் நகர் முழுவதும் பாதுகாப்பில்ஈடுபட்டுள்ளனர்.
மோதல் நடக்கலாம் என அஞ்சப்படும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். எந்த நிலைமையையும்சமாளிக்க போலீஸ் தயாராகவே உள்ளது என்றார்.
காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், பெங்களூரில் வியாழக்கிழமை அனைத்துப்பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனைமேற்கொண்டுள்ளோம் என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!