ஈராக் துணை அதிபர் இந்தியா வருகிறார்
டெல்லி:
ஈராக் மீதான பொருளாதாரத் தடையை, நீக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக ஈராக் அதிபர் டாகா யாசின் ரமதான் வருகிறார். ஈராக்-அமெரிக்கா போருக்குப் பிறகு அங்குபொருளாதரத் தடைகள் அமலாக்கப்பட்ட பின் இந்தியா வரும் முக்கிய ஈராக்கிய தலைவர் இவர் தான்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஈராக் அதிபர் யாசின் ரம்தான் வரும் 27 ம் தேதி இந்தியா வருகிறார். அவருடன் 17 அதிகாரிகள் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றும் வருகிறது.
அவர்களில் பெட்ரோலியத்துறை அமைச்சர் அமர் முகமது ரஷ்சித் மற்றும் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நூர் அல் வெஸில் ஆகியோரும்வருகின்றனர்.
ஈராக் மீது ஐ.நா.பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஈராக் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நியாயமற்றது. நேர்மையற்றது. ஈராக்கில்வசிக்கும் மக்களுக்கு எதிரானது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவும், ஈராக்கும் விவசாயம், தொலைத்தொடர்பு, உணவு,தொழில்துறை, தகவல் தொழில் நுட்பம், வீடு கட்டுமானம் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ரம்தானின் இந்தியவருகையின் போது விவாதிக்கப்படும்.
இந்தியா வரும் ஈராக் அதிபர் ரம்தான், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம் நாயக் ஆகியோரையும் சந்தித்துப் பேசுவார்.
ரம்தான் தனது இந்திய சுற்றுப் பயணத்தின் போது, பெங்களூர் வந்து, அங்கு செயல்படும் தகவல் தொழில் நுட்ப மையங்கள் சிலவற்றைப் பார்வையிடவும்உள்ளார் என்றார்.
பல்லாண்டுகளாக ஈராக்கோடு இந்தியா நல்லுறவைப் பேணி வந்தது. வளைகுடாப் போரினால் இந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும்ஈராக்குக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கியே வந்தது. இப்போது அந் நாட்டு துணை அதிபர் இந்தியா வருவது இரு நாட்டுஉறவை மீண்டும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications