For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நில நடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நில நடுக்கம் பாதித்த
தமிழக-கேரள எல்லைப் பகுதி

தமிழகத்திலும் கேரளத்திலும் லோசான நில நடுக்கம் ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை தமிழகத்தில் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை, குன்னூர், உதகமண்டலம் (ஊட்டி)மற்றும் கோயமுத்தூர் நகரின் பல பகுதிகளிலும் இந்த நில நடுக்கத்தை உணர முடிந்தது.

காலை 6.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 2 முதல் சில நொடிகள் வரை நீடித்தது. ரிக்டர் அளவுகோலில் 5.0 அளவுக்குஇந்த நிலநடுக்கம் பதிவானது என மண்டல நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துளளது.

உடுமலைப்பேட்டையில் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் நில நடுக்கத்தால் தூக்கி கீழே வீசப்பட்டனர். வீடுஇடியப் போகிறது என நினைத்த அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

நில நடுக்கத்தால் இதுவரை உயிரிழப்போ அல்லது சொத்துக்களுக்கு சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை என போலீசார்தெரிவித்தனர்.

கேரளத்தில் தான் நிலநடுக்கத்தின் அதிர்வு அதிகம் இருந்தது. வட கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த பாதிப்புஇருந்தது. தென் தமிழகத்திலோ அல்லது வட தமிழகத்திலோ நில நடுக்கம் ஏதும் உணரப்பட்டதாக செய்திகள் இல்லை.

கேரளாவில் நிலநடுக்கம்

கேரளாவில் பல மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் தொடர்ந்து 4 நிமிடங்கள் நீடித்தது.

இதுகுறித்து கேரள பூகோள ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கங்காதரன் கூறியதாவது:

தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் நில நடுக்கத்தின்தாக்கம் அதிகம் இருந்தது.

5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோஏற்படவில்லை. சரியாக காலை 6.54 மணிக்கு ஏற்பட்ட இந் நில நடுக்கம் சிலவினாடிகள் நீடித்தது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது மிகப்பெரிய சத்தம் ஏற்பட்டது. வீடுகளின் கதவுள்,ஜன்னல்கள் சேதமடைந்தன. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மேஜைகள், நாற்காலிகள்இடம்பெயர்ந்தன.

பாதிக்கப்பட்ட இடங்கள்:

பத்தன்திட்டா, கோட்டயம் பகுதிகளில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி ஓடஆரம்பித்தனர். கோட்டயம் மாவட்டத்தில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.தொலைபேசிகளும் செயலிழந்தன.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம்,இடுக்கி மற்றும் திரிசூர் பகுதிகளில் சில வீடுகள் சேதமடைந்தன என்றார்.

சபரி மலையில்...

சபரிமலை அருகே பத்தணம்திட்டாவில் அமைக்கப்பட்டுள்ள 3ம் எண் பக்தர்கள்மையத்தில் 4 மாடிக் கட்டடத்தில் நில நடுக்கம் காரணமாக விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து அதில் தங்கியிருந்த ஐயப்ப பக்தர்கள் பயந்து வெளியே ஓடினர்.

இந்தப் பகுதியில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் கீழே விழுந்தன.

பம்பா மலையில் கொட்டகைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் அங்கிருந்து சறுக்கிஓடியது. அதில் அப்போது பஸ் டிரைவர் மட்டும் தான் இருந்தார். உடனடியாக அவர்பஸ்ஸை நிறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X