சென்னையில் நரம்பியல் நிபுணர்கள் மாநாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய நரம்பியல் கழகத்தின் 49-வது அகில இந்திய மாநாட்டை வரும் 14-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.செல்லப்பன், நரம்பியல் துறை தலைவர் டாக்டர் ம.மோகன் சம்பத்குமார் ஆகியோர்நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள நரம்பியல்துறை இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்றது. இந்தத் துறையில் கடந்த 5 ஆண்டுகளாகஅறுவை சிகிச்சையில் பழைய முறைகளை மாற்றி புதிய முறைகள் கையாளப்பட்டு வருகின்றன.

சென்னை அரசு மருத்துவனையில் நரம்பியல் துறை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி நரம்பியல் துறை பொன் விழா ஆண்டைசிறப்பாக கொண்டாடுகின்றோம்.

பொன் விழா சென்னை கிண்டியில் உள்ள லி ராயல் மெரிடியன் ஹோட்டலில் வியாழக்கிழமை காலை நடக்கிறது. விழாவிற்கு தமிழக நல்வாழ்வுத்துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமை தாங்குகிறார். தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் பொன்விழா நிகழ்ச்சிகளை தொடங்கிவைக்கிறார்.

இந்திய நரம்பியல் கழகத்தின் 49-வது அகில இந்திய மாநாடு தொடக்கவிழா மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதை முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார்.

மாநாட்டில் இந்தியாவில் இருந்தும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்பியல்சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவர்களில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த ஐப்பானைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரும் கலந்து கொள்கிறார். மாநாட்டையொட்டி புதியநவீன நரம்பியல் அறுவை சிகிச்சை கருவிகள் கண்காட்சியும் நடைபெறுகிறது.

இந்த மாநாடு நரம்பியல் சிகிச்சை டாக்டர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற