நாடாளுமன்றத்தில் அமைதி திரும்பியது
டெல்லி:
அயோத்தி குறித்த பிரதமரின் கருத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராகவுள்ளதாகக் கூறியதையடுத்து எதிர்க்கட்சிகள்போராட்டத்தைக் கைவிட்டன.
அயோத்தி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் பாலயோகி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் அனைத்துக்கட்சியினரும் கலந்து கொண்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் கடந்த 7 நாட்களுக்குப் பிறகு அமைதி ஏற்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 184 ன் படி அயோத்தி விவகாரம் விவாதிக்கப்படும் என்று பாலயோகி வாக்குறுதி அளித்தபின் நாடாளுமன்றம்நடத்தப்படுவதற்கு எதிர்க்கட்சியினர் சம்மதம் தெரிவித்தனர்.
முன்னதாக, பிரதமர் வாஜ்பாய் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது ஒரு தேசிய உணர்வு. இதுஎனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.
பாபர் மசூதி கட்டுவதற்கு வேறு இடம் கொடுக்கப்படும் என்றார். இதற்கு கூட்டணிக் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகள் சபை நடக்கவிடாமல் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தின. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றம் கூடிய சில மணிநேரங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications