புலிகளுடன் சமரசத்துக்கு இலங்கை கட்சிகள் ஆதரவு
கொழும்பு:
நார்வே தூதுக்குழுவினரின் முயற்சியுடன் இலங்கை அரசு, விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தமுயல்வதற்கு அங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஆனால், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் தயாரா என்பதை நார்வே தூதுக்குழுவினரின்மூலம் நன்கு தெரிந்து கொண்டு பின்னர் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக வேண்டும் என்று அக்கட்சிகள்வலியுறுத்தியுள்ளன.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயாரா என்பதை அறிந்து கொள்ளஅரசியல் கட்சிகளும், தொழிலதிபர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
விடுதலைப்புலிகள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்தால் கண்டிப்பாக அமைதிப்பேச்சுவார்த்தையை இலங்கை அரசு வரவேற்கும் என்று ஆளும் கூட்டணியான மக்கள் கூட்டணி அமைச்சர்ஜெயரத்னே கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
இன்னொரு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமுடன்இருக்கிறது. ஆனால் தனி ஈழம் என்ற குறிக்கோளை விடுதலைப்புலிகள் விட்டு விட வேண்டும் என்றுகூறியுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூறுகையில், அரசு இந்த முறை விடுதலைப்புலிகளுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கூறியுள்ளார்.
தமிழ் கட்சிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈபிடிபி மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் கருத்துத்தெரிவிக்கையில், நாங்கள் இனப்பிரச்சனை தீர முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளன.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
