அமைதியில் காஷ்மீர் .. ராணுவ தளபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரம்ஜானையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தால் அங்கு ஓரிருசம்பவங்களைத் தவிர வன்முறை, துப்பாக்கிச்சண்டை ஆகியவை பெருமளவு குறைந்துள்ளன என்று இந்தியராணுவத் தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் சண்டைநிறுத்தம் கடைபிடிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துரிதமான மாற்றம்ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சண்டை பெரும்பாலும் குறைந்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களிடம் முடிந்த அளவு சண்டை போடாமலிருக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டதைத் தொடர்ந்து, போர்க்களமாக இருந்த எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதி தற்போது வன்முறையில்லாதஸ்தலமாகக் காட்சியளிக்கிறது.

சண்டை நிறுத்தத்திற்கு நல்ல ஆதரவு உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே ஒரு சில துப்பாக்கிச் சண்டை சம்பவங்கள்ஏற்பட்டு வருகின்றன.

சண்டை நிறுத்தத்திற்கு சில தீவிரவாத அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அவைகள் மட்டும் முடிந்தஅளவு வன்முறையைத் தூண்டி விட்டும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில்ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுத் தீவிரவாதிகளாகவே இருக்கின்றனர்.

அவ்வப்போது சில சம்பவங்கள் ஏற்பட்டன. அவற்றில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்போது ஜம்முகாஷ்மீர் முழு அமைதியில் உள்ளது என்றார் பத்மநாபன்.

ஐ.ஏ.என்.எஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற