For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்புத் தங்கத்திற்கு வலை வீசும் மீனவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வடசென்னையில் வாழும் மீனவர்களுக்கு, கடலில் மீன்களுக்கு பதில் கருப்புத் தங்கம்என்றழைக்கப்படும் நிலக்கரி கிடைத்து வருகிறது.

வட சென்னையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு மீன்களைத்தவிர நிலக்கரியும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் வீசிய பலத்த புயலுக்குப்பின்நிலக்கரி கிடைக்க ஆரம்பித்துள்ளது.

முதலில் இந்த நிலக்கரி மிகப் பெரிய கறுப்பு பந்து போல் கிடைத்தது. இதனால் சிலர்அது கடற்தாவரங்களிலிருந்து வந்த கழிவுப் பொருட்கள் தான் பின் கரியாகமாறியுள்ளது என நினைத்தனர்.

ஆனால் இந்த கறுப்புத் தங்கம் எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் முழுமையாகதெரியவில்லை. கடலில் மூழ்கிய கப்பல்களின் உடைந்த பாகங்களிலிருந்துகிடைத்திருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

ஆனால் கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரி கடலில் விழுந்திருக்கக்கூடும்.அவை தற்போதைய புயலினால் கடல் ஆழத்திலிருந்து மேலே வந்திருக்கலாம் என்றுசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

25 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய கப்பல் சமீபத்தில் வீசிய புயல் காரணமாகஉடைந்து அதிலிருந்த நிலக்கரி மேலே வந்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கையில், அதிக அளவில் நிலக்கரிஏற்றுமதியும், இறக்குமதியும் கப்பல் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த சமயங்களில்கடலில் விழுந்த நிலக்கரி சமீபத்திய புயல் காரணமாக ஆழ் கடலிலிருந்து வெளியேவந்திருக்கும். அந்த நிலக்கரிதான் இப்போது மீனவர்களுக்கு கிடைத்துள்ளது என்றனர்.

நிலக்கரி கிடைப்பதால் மீனவர்களுக்கு வருத்தமில்லை. காசிமேடு - எண்ணூ

பல மீனவர்கள் மீன்களுக்கு வலை வீசுவதற்கு பதிலாக நிலக்கரிக்கு வலை வீசஆரம்பித்து விட்டனர்.

சில மீனவர்கள் மூடநம்பிக்கை காரணமாக இந்த நிலக்கரியை தங்கள் வீடுகளில்பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். சிலர் விற்று லாபம் பார்க்கின்றனர்.

கடலில் கிடைத்த நிலக்கரி, சூரிய ஒளியில் உலர வைக்கப்பட்ட பிறகு சிறியஅளவிலான நிலக்கரி கிலோ ஒரு ரூபாய்க்கும், பெரிய அளவிலான நிலக்கரி கிலோ 3ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

யு.என். ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X