உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி எது?
ஈரோடு:
கூட்டணியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தி.மு.க.,வின் கருத்து என்றால், அயோத்தியில் ராமருக்குக் கோயில்கட்டுவது பா.ஜ.,வின் கருத்து. மதச்சார்பற்ற உண்மையான கூட்டணி தி.மு.க. வில் தான் உள்ளது என தமிழ்நாடுபாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலர் இல. கணேசன் பேசினார்.
ஈரோட்டில் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட த் தலைவர்காந்தி தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல. கணேசன்பேசியதாவது:
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத்தியில் நரசிம்மராவ் ஆட்சி தான் இருந்தது. தற்போது இந்த பிரச்னையைகாங்கிரஸ் கட்சி தான் கிளப்பி வருகிறது. முழுக் கட்டுப்பாட்டில் மாநில அரசை வைத்துக் கொண்டிருந்த மத்தியஅரசில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால் இப்பிரச்னையைத் தேவையில்லாமல் இப்போது காங்கிரஸ்கிளப்பியுள்ளது.
இந்த பிரச்னையை வரும் சட்டசபைத் தேர்தல் வரை நாங்கள் விடுவதாக இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்துத்தான் பிரதமர் வாஜ்பாய், ராமர் கோயில் கட்டுவது தேசிய உணர்வின் வெளிப்பாடு எனக் கூறியுள்ளார்.
கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் ஒரு கொள்கையைக் கொண்டுள்ளன. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. அது போல ராமர் கோயில் கட்டுவது பாரதிய ஜனதாவின் கொள்கை. தமிழகத்தில்உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி தி.மு.க.,பா.ஜ.,அடங்கிய கூட்டணி தான் என்றார் இல.கணேசன்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications