For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடுபிடிக்கிறது பாக்.- இந்தியா இன்டர்நெட் போர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Pakistani Government site Hacked by Indians
ஊடுறுவலால் பாதிக்கப்பட்ட பாக். தளம்

பாகிஸ்தான் அரசின் வெப்சைட்டில் இந்திய இன்டர்நெட் ஊடுறுவல் புலிகள்வியாழக்கிழமை புகுந்து இந்தியாவைப் புகழ்ந்தும், பாகிஸ்தானை இகழ்ந்தும் பலவாசகங்களைப் பிரசுரித்தனர்.

பாகிஸ்தானை எப்படி சமாளிக்கலாம் என்று ஒட்டுமொத்த இந்தியாவே, கன்னத்தில்கை வைத்து யோசித்துக் கொண்டிருக்கிறது. புதன்கிழமைதான் அமைதிக்கு வழிவகுக்கும் வகையில், காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை மேலும் 1 மாதத்திற்குநீட்டிப்பதாக பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கு அடுத்த நாளே, இன்டர்நெட் மூலம் பாகிஸ்தான் மீது இந்திய தகவல்தொழில்நுட்பத் துறையினர் போர் தொடுத்துள்ளனர். 30 நிமிடங்களக்குள்,பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இன்டர்நெட் தளத்திற்குள் புகுந்த இந்தஇன்டர்நெட் ஊடுறுவல்காரர்கள், அங்கிருந்த அத்தனை பைல்களையும் அழித்துவிட்டு, இந்தியாவைப் புகழ்ந்தும், இந்தியாவிடம் மோத வேண்டாம் என்றுவாசகங்களைப் பிரசுரித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது, மாநாட்டுஇன்டர்நெட் தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் வலைத் திருடர்கள், இந்தியஎதிர்ப்புமற்றும் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்களைப் போட்டனர்.

அதற்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய தகவல் மையத்தின் இன்டர்நெட்தளத்திற்குள் புகுந்த இவர்கள் அங்கும் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்களைப்பிரசுரித்தனர்.

இதைத் தொடர்ந்து, சமீபத்தில், விதேஷ் சன்சார் நிகாம் நிறுவன (வி.எஸ்.என்.எல்.)தளத்திலும் இவர்கள் தங்கள் வலை வரிசையைக் காட்டினர்.

இத்தனை நாட்களாப் பொறுத்துப் பார்த்த இந்திய இன்டர்நெட் ஊடுறுவல்காரர்கள்,பாகிஸ்தானுக்கு சரியான வலையடி கொடுத்துள்ளனர். அவர்கள் கையில் சிக்கியதுபாகிஸ்தான் அரசின் இன்டர்நெட் தளம்.

வியாழக்கிழமை இந்தத் தளத்திற்குள் புகுந்த இந்திய ஐ.டி. நிபுணர்கள் அங்கிருந்தமுதல் பக்கத்தை முற்றிலுமாக அழித்து விட்டனர். அதற்குப் பதில், இந்த தளத்தைஇந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்திய இணையத்தளங்களுக்குள் நுழைந்து தங்கள் கைவரிசையைக் காட்டும் பாகிஸ்தான் வலைத்திருடர்களுக்குப் பாடம் கற்பிக்கவே நாங்கள் நுழைந்துள்ளோம்.

இந்தியா வாழ்க, நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். அமைதியை விரும்பும்மனிதர்களான எங்களுக்கு, இந்த செயல் பெரிய குற்றமாகத் தெரியவில்லை.

இதுதான் பாகிஸ்தான் அரசின் இணையத் தளத்தின் லட்சணம். அவ்வளவு மோசமானநிலையில் இந்த நாடு உள்ளதையே இந்த இணையத் தளம் காட்டுகிறது. நாங்கள் 30நிமிஷத்திலேயே இந்த தளத்திற்குள் நுழைந்து விட்டோம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா சூப்பர் பவர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்திய இணையத் தளங்களுக்குள் நுழைவதற்கு முன்பு இனிமேல்பாகிஸ்தான் வலைத் திருடர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாங்கள்தான் உலகிலேயே சிறந்த வலைத் திருடர்கள். ஆனால் அதைநினைத்தபோதெல்லாம் முட்டாள்தனமாக செய்வதில்லை. தேவைப்பட்டால்தான்செய்வோம். இதுதான் பாகிஸ்தானியர்களுக்கு நாங்கள் விடுக்கும் கடைசி எச்சரிக்கை.

இந்தியர்களுடன் இனிமேலும் விளையாட வேண்டாம். எங்களுக்கு உங்களை அழிக்கஏ.கே.56 துப்பாக்கி தேவையில்லை என்று அந்த வாசகங்களில் கூறப்பட்டிருந்தது.

இந்தியாவில் சுமார் 40 முதல் 50 இன்டர்நெட் ஊடுறுவல்காரர்கள் வரை இருக்கலாம்என்று கூறப்படுகிறது. இது அதிவேகமாக பெருகி வருவதாகவும் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஒவ்வொரு இன்டர்நெட் தளமும், வாரம் ஒருமுறையாவது இப்படிஊடுறுவல்காரர்களிடம் சிக்குவதாகக் கூறப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X