For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.

By Staff
Google Oneindia Tamil News

நீதிபதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அவ்வப்போது ஜலதோஷம் பிடித்த மாதிரி - நீதித் துறையின தாமதங்கள்பற்றிய கவலை பிறப்பது, நமக்கு பழக்கமாகி விட்ட காட்சிகளில் ஒன்று.

இந்த ஜலதோஷம், இப்போது மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லிக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிவராஜ்பட்டீலுக்கும் பிடித்தது: மத்திய அரசின் கலாச்சாரத்துறை நடத்திய ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு - இருவரும்தும்மல் போட்டு தீர்த்தார்கள்: துரித கதியில் வழக்குகளை தீர்த்து வைக்கிற சில விசேஷ நீதிமன்றங்கள் தேவைஎன்று அமைச்சரும், - நீதிபபதிகளின் ஸ்தானங்கள் காலியாகக் கிடப்பதுதான் பிரச்னை என்று நீதிபதியும் கருத்துதெரிவிக்க, தும்மல் ஓய்ந்தது: கருத்தரங்கு முடிந்தது. ஜலதோஷமும் இப்போது விலகிவிடும்.

இனி இந்தப் பிரச்னை பற்றி ஏதாவது பேச்சு வரும்போதுதான், இப்படி ஒரு பிரச்னை இருப்பதாகவேநிர்வாகத்திற்கும், நீதித்துறைக்கும் நினைவு வரும்.

இப்படி விட்டுவிட்டு, அவ்வப்போது முடிந்தால், கருத்தரங்குகளில் பேசி முடிவு காணக்கூடிய பிரச்னை அல்ல இது.அமைச்சர் கூறிய மாதிரி நமது நீதித்துறை, பெரும்பாலும் சுதந்திரமாகவே இயங்குகிறது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய விஷயம்: மற்ற துறைகளை நம்புவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக, மக்கள் நீதித் துறையைநம்புகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால், நீதித்துறையின் சுதந்திரம் சில நேரஙகளில் அரசியல் நெரிசலில் சிக்கி நசுங்கியும் இருக்கிறது என்பதும்:மக்களின் நம்பிக்கை ஏமாற்றமாக முடிந்த நேரங்களும் சில உண்டு என்பதும் கவலை தரக்கூடிய நிலைகள்.

இது ஒருபுறமிருக்க, வழக்குள் தீர்க்கப் படாமலேயே தேங்கி நிற்பது என்பது - நீதித்துறையின் மிகப் பெரியபலவீனம். நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உடையவர்கள் கூட, ஒரு பிரச்னை என்றால் நீதிமன்றத்தை அணுகத்தயங்குகிறார்கள்.

கோர்ட்டுக்குப் போனால் எத்தனை வருஷம் ஆகுமோ? இழுத்துக்கிட்டே போகுமோ?அப்பீல் அது இதுன்னு வந்தாகேட்கவே வேண்டாம். என்னிக்கு வழக்கு முடிஞ்சு,எப்போ தீர்ப்பு வந்து , எந்த ஜென்மத்திலே பிரச்னை தீரூம்?என்ற பயத்தின் காரணமாக பலர் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கிறார்கள். இந்த சிக்கலைத் தீர்த்து வைக்க,இது வரையில், ஒரு வழியும் முயற்ச்சிக்கப்பட்டதாக தெரியவில்லை.

கீழ் கோர்ட்டுகளில் கோடிக் கணக்கிலும், ஹைகோர்ட்டில் லட்சக் கணக்கிலும, சுப்ரீம் கோர்ட்டில்ஆயிரக்கணக்கிலும் - வழக்குகள் பல, பற்பல, பற்பல பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கின்றன. இதற்கு என்னசெய்வது?

எடுத்த எடுப்பிலேயே மத்திய - மாநில அரசுகள் முனைந்து செய்யக் கூடிய உதவி ஒன்றிருக்கிறது. அரசுகள்சம்பந்தப்பட்ட வழக்குள்தான் அதிகம் பதிவாகின்றன என்பது எல்லோரும் கூறுகிற விஷயம்.

இவற்றில் கிரிமினல் வழக்குகள் ஒரு புறம் இருக்கட்டும்: சிவில் வழக்குகளை எடுத்துக் கொண்டால், நிலைமைரொம்ப மோசம்.

அரசு தொடுக்கிற வழக்காக இருந்தாலும் சரி. அரசின் மீது தொடுக்கப்படுகிற வழக்காக இருந்தாலும் சரி -இழுத்துடிப்பது என்பது அரசு வக்கீல்களின் அடிப்படை அணுகுமுறையாகிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X