ஓ மானே, மானே .. எங்கே போனே?
சேலம்:
மேட்டூர் அணை பூங்காவில் இருந்த பெண் மானைக் காணவில்லை என போலீசில்புகார் செய்யப்பட்டுள்ளது. மான் போன திசை எங்கே என்பதில் மர்மம் நீடித்துவருகிறது.
மேட்டூர் அணை அருகே சுற்றுலாப் பயணிகளைக் கவர ஒரு விலங்கியல் பூங்காஅமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் பல அபூர்வ ரக வன விலங்குகள்வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்காவைச் சுற்றிலும் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள குரங்கு, மான், மற்றும் பாம்பு பண்ணை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைகவரக் கூடியது. இந்த பூங்காவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடிவெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து இந்த பூங்கா மூடப்பட்டது.
பூங்காவில் இருந்த விலங்குகள் சேலத்திற்கு அருகில் உள்ள பூங்காவிற்குமாற்றப்பட்டது. இந்த பூங்காவிற்கு குரங்குகள், மற்றும் சில விலங்குகள்மாற்றப்பட்டன. ஆனால் பூங்காவில் இருந்த மான் மற்றும் பாம்புகளை மாற்றிக்கொள்ள வனத் துறையினர் காலதாமதம் செய்து வந்தனர்.
இதையடுத்து 2 ஆண் மான்கள், 2 குட்டி மான்கள், 3 பெண் மான்கள் என ஏழு மான்கள்இருந்தன. இந்த மான்கள் தினமும் பூங்காவில் சுதந்திரமாக உலாவி புற்களை மேய்ந்துவந்தன.
பூங்காவைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டிருப்பதால், யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. அதேசமயம் மான்களும் வெளியேறிச் செல்ல வாய்ப்பு இல்லை.இந்நிலையில் பூங்காவில் இருந்த பெண் மானைக் காணவில்லை. இதனால்அதிர்ச்சியடைந்த பூங்கா பராமரிப்பு ஊழியர்கள், போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!