For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படையப்பாவுக்கு வலைவீச்சு?

By Staff
Google Oneindia Tamil News

சிறந்த நடிகருக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு படையப்பா படத்தில் சிறப்பாகநடித்ததற்காக வழங்கப்பட்டது. படையப்பா படம் ரஜினிகாந்தின் எல்லா படங்களைப்போல வெற்றி பெற்ற படம் தான். இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் தேர்தல்சமயத்தில் இந்த படத்தில் நடித்த ரஜினிக்கு விருது கொடுத்தது, மேடையில் அவருக்குமுக்கியத்துவம் அளித்தது, அரசியல் சதுரங்கத்தில் ரஜினியை தங்களுக்கு சாதகமாகபயன்படுத்திக் கொள்ள தி.மு.க. செய்யும் முயற்சியோ என்ற ஐயப்பாட்டைஎழுப்பியுள்ளது.

முதல்வர் விருது வழங்கும் விழாவில் பேசும் போது, தம்பி ரஜினி என்றும் எங்கள்பின்னால் இருக்கிறார் என கூறி ரஜினிகாந்தின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாககாட்டிக் கொண்டார்.

ஆனால் இதற்கு ரஜினியின் பதில் வழக்கமானன் மர்ம புன்னகைதான். ரஜினி பேசும்போதும் ஆட்சிக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பது முக்கியம் எனகூறியது நிலவி வந்த குழப்பத்தை மேலும் குழப்பி விட்டது.

அவர் யாரை ஆதரிக்கிறார் என்பது இன்னும் தெளிவாகாத நிலைதான் நிலவுகிறது.

தி.மு.க. அவருக்கு விருது வழங்கியது அரசியல் முக்கியத்துவம் வாயந்தததாகவேகருதப்படுகிறது. அவருக்கு முக்கியத்துவம் அளித்ததும்,தி.மு.க.வுக்கு ஆதரவுபெறத்தான் என்ற கருத்தும் பரவலாக நிலவி வருகிறது.

அவர் ஆதரவை பெற்று விட்டால் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்ந்து விடலாம் என்றஎண்ணத்தில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. கடந்த ஆட்சியாளர்கள் மீது வழக்குதொடர்வதிலேயே ஆளும் கட்சி குறியாக இருக்கிறது என்ற சிறு குற்றச்சாட்டும் ஆளும் கட்சியின் மீது இருக்கிறது.

வெற்றி பெற்றவர்கள் தங்கள் தொகுதிக்கு நல்லது செய்யவில்லை என்ற எண்ணமும்சில தொகுதிகளில் நிலவுகிறது. இவை தேர்தலில் எதிரொலித்தால் ...?

ரஜினி சொன்னால் போதும்! அவர் ரசிகர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக களம்இறங்குவார்கள்! வெற்றி கனியை பறித்து கொடுத்துவிடுவார்கள் என்ற கணிப்பில்ரஜினியை எப்பாடுபட்டாவது தன் பக்கம் இழுத்துவிட வேண்டும் என தி.மு.க. எடுத்தமுயற்சியில் ஒன்றுதான் ரஜினிக்கு விருது கொடுத்து மகிழ்வித்தது.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது. ரஜினிகாந்த்தமிழ் மாநில கட்சி தலைவர் மூப்பனாரை மிகவும் மதிப்பவர். அவர் தி.மு.க.கூட்டணியில் இருந்த போது ரஜினி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தார்.

1999-ம் ஆண்டு அவர் தி.மு.க.கூட்டணியைவிட்டு விலகி அ.தி.மு.க. கூட்டணியில்சேர்ந்த பின் ரஜினி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இப்போதும் அ.தி.மு.க.கூட்டணியில் மூப்பனார் தொடர்ந்து வருகிறார்.

ஆனால் தேர்தல் போதும் அந்த கூட்டணி தொடருமா என்பது பொருத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம்.

Rajinikanthமூப்பனார் தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என பலகட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகிறது. அது நடந்து விட்டால் ரஜினி அந்தகூட்டணிக்கு ஆதரவு தரலாம் எனவும் தி.மு.க. எண்ணுகிறது. அது போல் எதுவும்நடக்கும் முன் ரஜினியின் ஆதரவை பெற்றுவிட வேண்டும் என தி.மு.க. ரஜினியைஇழுத்துவிட பிரம்ம பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது.

மூப்பனாரை தி.மு.க. வுக்கு அழைக்க முடியாது. த.மா.கா.வோடு உறவு முறிந்துவிட்டது என முதல்வரே அறிவித்துவிட்ட நிலையில் அவரோடு உறவு என்பதுஎட்டாக்கனிதான். ஆனால் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும்இல்லை.

ஒரு வேளை மூப்பனார் தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் ரஜினி ஆதரவு கிடைக்கும்எனவும் தி.மு.க. எண்ணுவதாகத் தெரிகிறது. ஆனால் மூப்பனாரை வெளிப்படையாகதங்கள் கூட்டணிக்கு அழைக்க தி.மு.க. தயக்கம் காட்டுகிறது.

என்ன செய்தால் ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என்ற குழப்பத்தில் தி.மு.க.ஆழ்ந்திருக்கிறது. அவர் மர்ம புன்னகைக்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது?அவர் பேச்சுகளை எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளவது? என்றகுழப்பத்தின் உச்சியில் அல்லாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க.

ரஜினிகாந்திற்கு இந்திய அரசின் பத்ம பூஷன் விருது சென்ற ஆண்டு வழங்கப்பட்டது.அதுவே ரஜினிக்காக வீசப்பட்ட முதல் வலையோ என்ற சந்தேகத்தையும் இப்போதுபலரிடையே எழுப்பியுள்ளது. ஏனென்றால் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயககூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகிப்பது இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் ஆதரவை பெற்றுவிட அவருக்கு விருது வாங்கியது அவருக்காக தி.மு.க.விரித்திருக்கும் வலையின் முதல் படி. தேர்தலுக்கு சில காலம் இருக்கும் நிலையில்ரஜினியின் ஆதரவை பெற மேலும் பல விதமான சிறந்த பாராட்டுகள் புகழ்களைதி.மு.க. வாரி வழங்கும்.

இதற்கெல்லாம் மயங்குவாரா ரஜினி? தி.மு.க. பக்கம் தன் பார்வையை வீசுவாரா?பொருத்திருந்து பார்ப்போம். சுவாரஸ்யமான காட்சிகள் நமக்காக காத்திருக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X