For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் பார்வையிட்டார்

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ், அகமதாபாத் மற்றும் கட்ச் மாவட்டங்களை திங்கள்கிழமைபிரதமர் வாஜ்பாய் விமானம் மூலம் பார்வையிட்டார்.

பிரதமருடன், உயர் அதிகாரிகள் பலர் உடன் சென்றனர். ஆபரேஷன் சகாயதா என்ற பெயரில் ராணுவ, விமானமற்றும் கடற்படை வீரர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தேசிய மற்றும் சர்வதேச சமூக சேவை அமைப்புகள்ஆகியவை தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

கான்ட்லா துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மருத்துவமனையாகவே மாறி காயமடைந்தவர்களுக்கு 24மணிநேரமும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பூஜ், அன்ஜார், ரபார், பசாவா, அகமதாபாத், சுரேந்திரநகர், மோர்பி ஆகிய நகரங்களில் மட்டும்இடிபாடுகளுக்கிடையில் 1 லட்சம் பேர் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடி வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று துல்லியமாகக் கணக்கிடவில்லை. இதுவரை 7,000சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் நடந்து வரும் இந்த நேரத்தில், மொத்தச் சாவு 30,000 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பூஜ் நகரில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு 3.5. ரிக்டர் மற்றும் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்உணரப்பட்டது என்று டெல்லியிலுள்ள இந்திய பூகோளவியல் துறை கணக்கிட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X