For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேவையில் ராணுவ வீரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

போர்க் காலத்தில் மட்டுமல்ல, இயற்கை சீற்றத்தின் சமயங்களிலும் தங்களால் சிறப்பாகசெயல் பட முடியும். தங்களால் மக்களுக்கு எப்போதும் உதவ முடியும் என்பதைஇந்திய ராணுவத்தினர் நிரூபித்துள்ளனர்.

ராணுவ வீரர்கள்தான் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக முதன்முதலில் சென்றார்கள். தங்களுடன் மருந்துகள் மீட்பு பணிக்கு தேவையானவற்றுடன்சென்று பலரின் உயிர்களையும் மீட்டார்கள்.

குஜராத்தில் ராணுவம் நடத்தி வரும் மீட்பு பணிக்கு சகாயதா (உதவி) என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. 20,000-க்கும் அதிகமான வீரர்கள் மீட்பு பணியில்ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

அகமதாபாத், பூஜ், ஜாம்நகர், மோர்பி, டுரோல், ஜோடியான் மற்றும் தரங்தாராபகுதிகளில் தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பச்சாவ் மற்றும் அஞ்சார்பகுதியிலும் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராணுவ வீரர்கள் மருத்துவ குழு, மருந்து பொருட்கள், புல்டோசர்கள், மண்ணைதோண்ட தேவைப்படும் உபகரணங்கள், குழி தோண்டும் மிஷின்கள் போன்றஅத்தியாவசியமான பொருட்களுடன் மீட்பு பணிக்கு சென்றுள்ளனர்.

கிராமப்புறத்திலிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள்,மருந்து, போர்வைகள் மற்றும் தங்கும் இட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுப்பதில் குறிப்பாக இருக்கிறார்கள்.

இதுவரை ராணுவம் 4,000 போர்வைகள், 1,400 தார்பாய்கள் கொடுத்துள்ளார்கள்.1,700 தங்குமிடங்களையும் அமைத்து கொடுத்துள்ளார்கள்.

ராணுவத்தினரின் முக்கிய குறிக்கோள் மக்களின் வாழ்வையும், உடைமைகளையும்பாதுகாப்பதுதான். அதன் பின் தகவல் தொடர்பை சரிசெய்வது, மருத்துவ சேவைகளைபலப்படுத்துவது போன்றவைதான். இதன் முலம்தான் மக்களின் தினசரி வாழ்க்கையைசகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.

பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பூஜ் நகரம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்துதுண்டிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிகளில் ராணுவத்தினர் தகவல் தொடர்பை மீண்டும்ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் என கூறினர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X