For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூசிக்கு ஆண்டுக்கு 15,000 பங்களாதேஷிகள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

தாக்கா:

மாசுக் கட்டுப்பாடு காரணமாக வங்கதேசத்தில் ஆண்டுக்கு 15,000 பேர் வரை இறக்கிறார்கள் என உலக வங்கிஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய சுற்றுச்சூழல் பிரிவின் முதுநிலை பொறியாளர் ஜிதேந்திர ஷா இதுகுறித்துக்கூறியதாவது:

வங்கதேசத்தில் மாசு அதிகம் உள்ளது. 15,000 பேர் இறப்பதைத் தவிர, பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் சரியானசிகிச்சையின்றி அவதிப்படுகின்றனர். 8.5 கோடி பேர் சாதாரண நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக வங்கதேச அரசுக்கு வருடந்தோறும் 800 மில்லியன் டாலர் வரை செலவாகிறது. இது அந்தநாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் விதத்தில் உள்ளது.

வங்கதேசத்தின் பெருநகரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து விட்டது. மேலும் நகர வளர்ச்சியும்அபரிமிதமாக உள்ளது. தூய்மைக் கேட்டை தவிர்ப்பதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வஙகதேசத் தலைநகர் தாக்காவில், காற்று மாசு அதிக அளவில் உள்ளது. தாக்கா பள்ளிச் சிறுவர், சிறுமியரின்ரத்தத்தில், மூன்று மடங்கு காரீயம் கலந்துள்ளது. இதனால் அவர்களது மன வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும்பாதிக்கப்படும்.

வங்கதேசத்தில் மாசு ஏற்படுவதைக் குறைக்க உலக வங்கி உதவவுள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பிறவாகனங்களின் அளவைக் குறைக்கவும் உலக வங்கித் திட்டமிட்டுள்ளது. இதற்காக நான்கு ஆண்டுத் திட்டம்வரையறுக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X