கைகொடுத்த வானொலி
சிட்னி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூலிப்பதற்காக ஆஸ்திரேலியா ரேடியோவில் இந்தி மற்றும் உருது மொழியில்ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கமும், ஆஸ்திரேலிய வானொலி நிலையமும் இணைந்து இந்த நிகழச்சியை ஒளிபரப்பியது. இந்தியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிமூலம் 1,35, 000 டாலர்கள் வசூலானது. உருது மொழியில் உருவான நிகழ்ச்சி மூலம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு 20,000டாலர்கள் வசூலானது.
மெல்போர்ன் வானொலி நிலையத்தில் இந்தி நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஜெயா சர்மா கூறுகையில், இந்தி மொழியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடம்நல்ல வரவேற்பு இருந்தது. இன்னும் பொதுமக்கள் பலர் தொலை பேசி மூலம் தாங்கள் உதவி செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி நிதி வசூல் செய்யும் நல்ல பணியை நான் முழு மகிழ்ச்சியுடன் செய்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்ய கடவுள்எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். இதற்காக கடவுளுக்கு நான் நன்றி கூற வேண்டும்.
25 க்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள், குஜராத் மக்களின் நலனிற்காக நிதி வசூல் செய்யும் பணியில்ஈடுபட்டு வருகின்றனர். வசூல் செய்யப்பட்ட பணம் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் உணவு, கம்பளிகள்,சுத்திகரிக்கப்பட்ட நீர் ஆகியவற்றைக் அனுப்பி வைப்பார்கள் என்றார்.
ஆஸ்திரேயாவில் உருது மொழி பேசும் மக்களில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்களே. வானொலியில் ஒளிபரப்பான உருது நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுபாகிஸ்தானியர்கள் பலர் நிதியுதவி செய்தார்கள்.
இந்தி, உருது தவிர ஆஸ்திரேலிய வானொலி மூலம் தமிழ், பஞ்சாபி, வங்காளம், குஜராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நிதி வசூல் செய்யும் நிகழ்ச்சிஒளிபரப்பானது. இதில் 2, 15, 000 டாலர்கள் நிதி வசூல் செய்யப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications