கோவை குண்டு வெடிப்பு .. 14 பேர் மீது விசாரணை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதாகி சிறையிலிருக்கும் 14 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல்வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 164 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர்.இவர்களில் சித்திக் அலி என்பவரைக் காண அவரது உறவினர் ஜின்னா என்பவர் சிறையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதான மற்றொரு கைதியின் சகோதரிகள் சபீரா, ரசியா, சாகுல்ஆகியோர் வந்தனர்.

இவர்கள் ஜின்னாவிடம், உளவுத் துறைப் போலீசார் விசாரணை என்ற பெயரில் தகாத றையில் நடந்துகொள்கின்றனர் என புகார் கூறியுள்ளார். இதை சிறைக்குள் இருந்த சித்திக் அலி உள்பட பலரிடம் தகவல்பரவியுள்ளது.

இதையடுத்து 14 பேர் சிறையில் நேர்காணலை நிர்வகித்து வரும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். எனவே, இச்சம்பவம் குறித்து போலீசார் 14 பேர் மீதும் கொலை மிரட்டல்வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+