For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜோதிபாசு

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாமல் போனால், அந்தக் கட்சியின் வெற்றி எந்த அளவுக்கு இருக்கும்?

ப: கணிசமான அளவுக்கு பாதிக்கப்படலாம். அதே சமயத்தில், தேர்தலில் நிற்க முடியாமல் செய்து விட்டார்கள் - என்ற அனுதாபம் தருகிற பலன்என்ன என்பதையும் பார்க்க வேண்டியிருக்கும்.

ஆக, அவர் தேர்தலில் போட்டியிட முடியாமற் போவது என்பது இரு முனைக்கத்தி. எந்த முனை கூர் அதிகமானது என்பதை இப்போது சொல்ல என்னால்முடியவில்லை.

கே: சந்தனக் கடத்தல் வீரப்பன், ராஜ்குமார் கடத்தல் விஷயத்தில் யாராவது ஓர் உண்மையைச் சொல்லக் கூடாதா என்று கேட்கிறீர்கள். ஜெயலலிதா- சோ சந்திப்பு அடிக்கடி நடக்கிறது: இதில் ஓர் உண்மையையாவது நீங்கள் சொல்ல மாட்டீர்களா?

ப: சரி. போனால் போகிறது. ஓர் உண்மையைச் சொல்கிறேன். இதுவரை இது பற்றி நான் சொன்னதெல்லாம் உண்மை.

கே: துக்ளக் வாசகர்களுக்கு சோவின் பதில்கள் பிடிக்கும். உங்களுக்கு யாருடைய பதில்கள் மிகவும் பிடிக்கும்

ப: வாசகர்களுக்கும், எனக்குமிடையே வித்தியாசம் பார்ப்பது எனக்கு பிடிக்காது. அதனால் அவர்களுக்கு பிடித்ததையே எனக்கும் பிடித்ததாக எடுத்துக்கொண்டு விடுகிறேன். அதுதான் பண்பு.

கே: த.மா.கா. தலைவர் மூப்பனாரைப் பாராட்ட வேண்டும் என்றால், எந்த விஷயத்தில் பாராட்டுவீர்கள்?

ப: எந்த விஷயத்திற்குப் பாராட்டுவது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க மாட்டேன். பாராட்டி விடுவேன். பிறகு யோசித்துக் கொண்டால்போயிற்று.

கே: யாரை நீங்கள் முதலில் ஆதரிக்கிறீர்களோ, அவருக்கு எதிராகவே பின்னர் எழுதுகிறீர்கள். ஏன் உங்களிடம் ஒரே நிலையான செயல்பாடு இல்லை?

ப: யாரைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்துகிறோமோ, அதே நபரை, பின்னர் ஒரு கட்டத்தில் கண்டித்து.வேலையிலிருந்து நீக்குகிறார் முதலாளி. நாம்முதலாளிகள்.

அரசியில் கட்சிகள் நம்மிடம் வேலை செய்ய மனுப் போடுகின்றன. வேலைக்கு அமர்த்துகிறோம். சரியில்லை என்றால் கண்டித்து வெளியே அனுப்புகிறோம்.

நிலையான செயல்பாடு என்று சொல்லிக் கொண்டு, வேலைக்கு வந்து விட்டவன் செய்கிற தவறுகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால்,நமக்குத்தானே ஆபத்து.

கே: இலங்கையில் விடுதலைப் புலிகள் போர் நிறுத்த நீட்டிப்பு செய்ததற்கும், இந்திய அரசு காஷ்மீரில் அறிவித்த போர் நிறுத்தத்தை நீட்டித்ததற்கும் என்னவேறுபாடு?

ப: அடுத்த தாக்குதலுக்கு அவகாசம் தேடுகிற முயற்சி: அடுத்த ஏமாற்றத்திற்கு தயாராகிற பெருந்தன்மை.

கே: தன்னுடன் மூன்றாவது அணி அமைக்க மூப்பானார் சம்மதித்தால், அவரை முதல்வர் ஆக்குவதாக நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்சொல்கிறாரே?

ப: நம்பலாம். சண்முகம் பல பொறியியல் கல்லூரிகளை நடத்துகிறார். அவற்றில் ஒன்றுக்கு மூப்பனாரை முதல்வர் ஆக்குவார் என நம்பலாம்.

கே: தாங்கள் மிகவும் பிரபலமான பத்திரிக்கையாளர், சட்ட நுணுக்கம் அறிந்தவர். பிரபலமான அரசியல் வாதிகளுக்கும் கூட, அவர்களுக்கு ஏற்றநல்ல ஆலோசனைகளைக் கூறுபவர். அதே போல் வரும தேர்தலில் நாங்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றும் நல்ல ஆலோசனை கூறுங்கள்...?

ப: என்னைப் பற்றிய மூன்று பிரமைகளையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், நான்காவது விஷயத்தின் அருகே போகமலிருப்பதுதானநல்லதோ - என்கிற சந்தேகம் எனக்கு வந்து விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X